என் பையன் வாழ்க்கையே கெடுத்துட்டான்.. தோனியால் கொந்தளிக்கும் கிரிக்கெட் வீரரின் தந்தை..!

Author: Vignesh
2 September 2024, 12:14 pm

யுவராஜ் சிங்கின் தந்தை யோகிராஜ் தோனியை கண்ட போது எல்லாம் தாக்கி பேசுவது இது முதல் முறை அல்ல. இந்த ஆண்டின் துவக்கத்தில் தோனியின் மோசமான செயல்களால் சென்னை சூப்பர் கிங்ஸ் 2024 ல் ஐபிஎல் வெற்றி வாய்ப்பு நழுவியது.

யுவராஜ் மீது தோனி பொறாமைப்படுகிறார் என்றெல்லாம் பேசி இருந்தார். ஏன் தோற்றார்கள் நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதையே அறுவடை செய்வீர்கள். தோனியின் பொறாமை தான் காரணம். அவர், யுவராஜ் உடன் கைக்கூட கொடுக்கவில்லை. அதனால், தான் இந்த ஆண்டு ஐபிஎல் வெற்றி வாய்ப்பை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இழந்தது என யோகிராஜ் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.

MS Dhoni - Yuvaraj Singh

இந்நிலையில், மீண்டும் யோகிராஜ் தோனியை குற்றம் சாட்டும் வகையில், யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்க்கையை தோனி கெடுத்துவிட்டார். அவரை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன் என யோகிராஜ் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தோனியின் முகத்தை கண்ணாடியில், அவரே பார்த்து கொள்ளட்டும். அவர் மிகப்பெரிய கிரிக்கெட் வீரர். ஆனால், என் மகனுக்கு எதிராக அவர் செய்தது எல்லாம் தற்போது, கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வந்து கொண்டிருக்கிறது.

Yuvaraj Singh - Yograj Singh

இதை என்னுடைய வாழ்நாளில் மன்னிக்க முடியாது என்றும் யோகிராஜ் வருத்தத்துடன் அந்த வீடியோவில் பேசியிருந்தார். இது கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.

  • Kamal haasan decided to not act in other companies இதுதான் என்னோட கடைசி படம்-திடீர் முடிவெடுத்த கமல்ஹாசன்? பகீர் கிளப்பும் தகவல்…