ஊழியருக்கு சல்யூட் அடித்த தோனி! வைரலாகும் புகைப்படம்

2 May 2021, 3:36 pm
Quick Share

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, அணியின் ஊழியர் ஒருவருக்கு சல்யூட் அடிக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தோனியின் டை ஹார்டு ஃபேன்கள், அது தொடர்பான மீம்ஸ்களையும் பகிர்ந்து வருகின்றனர். இதனால், சமூக வலைதளம் களை கட்டி உள்ளது.

கடந்த ஐபிஎல் சீசன் போல் இல்லாமல், இந்த ஐபிஎல் சீசனில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மாஸ் காட்டி வருகிறது. முதல் போட்டியில் தோல்வியை தழுவினாலும், அடுத்தடுத்து நடந்த 5 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிகளை பெற்று, புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து கெத்து காட்டி வருகிறது. அட்டகாசமான தொடக்கத்தை கண்டுள்ள சிஎஸ்கே அணியால், மஞ்சள் படை ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

கேப்டன் தோனிக்கு என பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. ‘தல’ என அவரை அன்புடன் அழைத்து வருகின்றனர் சென்னை ரசிகர்கள். அவர் குறித்து வெளியாகும் புகைப்படங்கள், வீடியோக்களை அவர்கள் வைரல் செய்ய தவறுவதில்லை. இந்நிலையில், அணியின் ஊழியர் ஒருவருக்கு, தோனி சல்யூட் அடிக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. இதனை அவரது ரசிகர்கள் வழக்கம் போல் வைரலாக்கி உள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், சென்னை அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டி முடிந்ததும் டிரஸ்சிங் ரூமுக்கு தோனி திரும்பும் போது, சென்னை அணியின் ஊழியர் ஒருவர், அவருக்கு சல்யூட் அடித்திருக்கிறார். பதிலுக்கு தோனியும் அவருக்கு சல்யூட் அடித்தார். கேமராவில் இந்த புகைப்படம் சிக்க, டுவிட்டரில் மீம்ஸ்கள் நிரம்பி வழிய துவங்கின.

Views: - 48

0

0

Leave a Reply