கொரோனாவுக்கு எதிரான போரில் ரிலையன்ஸ்..! அதிகம் பாதிப்பிற்குள்ளான மாநிலங்களுக்கு ஆக்சிஜன் சப்ளையை தொடங்கியது..!

15 April 2021, 9:16 pm
mukesh_ambani_updatenews360
Quick Share

இந்தியாவின் மிகப்பெரும் தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் அதன் சுத்திகரிப்பு நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் ஆக்ஸிஜனை மகாராஷ்டிரா போன்ற மிக மோசமான கொரோனா பாதித்த மாநில சுகாதாரத் துறைகளுக்கு அனுப்பி உதவி புரிவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் இரட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் சிறிய செயல்முறை மாற்றங்களின் மூலம் தொழில்துறை ஆக்ஸிஜனை மருத்துவ பயன்பாட்டு ஆக்ஸிஜனாக மாற்றியுள்ளன. அவை கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படலாம்.

மொத்தத்தில், ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து 100 டன் ஆக்ஸிஜன் அதிகம் பாதித்த மாநிலங்களுக்கு வழங்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

“இது ஒரு மனிதாபிமான காரணத்திற்காக இருப்பதால் ஆக்சிஜன் நன்கொடையாக வழங்கப்படும்” என்று ரிலையன்ஸ் நிறுவன உயர்மட்டத்திலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிரா நகர அபிவிருத்தி அமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவும் ரிலையன்ஸ் நிறுவனத்திடமிருந்து 100 டன் ஆக்ஸிஜனைப் பெறுவதை உறுதிப்படுத்தினார்.

ரிலையன்ஸ் நிறுவன உயரதிகாரி ஒருவர், ஆக்ஸிஜன் சிலிண்டர்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் போக்குவரத்தில் உள்ளன என்றார். இருப்பினும், உள்ளூர் அதிகாரிகள் தங்கள் இயக்கத்தை நிறுத்திய பின்னர் ஜாம்நகரில் லாரிகள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக, ஆக்ஸிஜன் விநியோகத்தில் பெரும் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள உத்தவ் தாக்கரே, மருத்துவ ஆக்ஸிஜன் விநியோகம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் பேசியுள்ளதாக நம்பப்படுகிறது.

தற்போது 1,200 டன் தேவைக்கு எதிராக ஏப்ரல் இறுதிக்குள் மாநிலத்தில் மருத்துவ ஆக்ஸிஜன் தேவை ஒரு நாளைக்கு 2,000 டன் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் மோடிக்கு கடிதம் எழுதினார்.

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் நைட்ரஜன் உற்பத்திக்கான காற்று பிரிக்கும் ஆலைகளில் குறைந்த அளவு தொழில்துறை ஆக்ஸிஜனை உருவாக்க முடியும். கார்பன் டை ஆக்சைடு போன்ற பிற வாயுக்களை வெளியேற்றுவதன் மூலம் அதை 99.9 சதவீத தூய்மையுடன் மருத்துவ பயன்பாட்டு ஆக்ஸிஜனாக மாற்ற முடியும்.

ரிலையன்ஸ் குஜராத்தின் ஜாம்நகரில் உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு வளாகத்தை இயக்குவது குறிப்பிடத்தக்கது.

Views: - 39

0

0