மும்பையில் 60 மாடி குடியிருப்பில் திடீர் தீவிபத்து… ஜன்னல் வழியாக தப்பிக்க முயன்றவர் கீழே விழுந்து உயிரிழப்பு..!!
Author: Babu Lakshmanan22 October 2021, 2:13 pm
மகாராஷ்டிரா : மும்பை அருகே 60 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து தப்பிக்க முயன்றவர் மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை கரே ரோட்டின் லோயர் பரேல் பகுதியில் அவிக்னானா பார்க் என்னும் 60 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதன் 19 வது மாடியில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். இது ஒரு குடியிருப்பு கட்டிடம் என்பதால் பலர் கட்டிடத்திற்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இதனிடையே, தீ விபத்து ஏற்பட்ட 19வது மாடியின் ஜன்னல் வழியாக, ஒருவர் வெளியேற முயன்றார். அப்போது, ஜன்னல் வழியாக தொங்கிக் கொண்டிருந்த அந்த நபர், கீழே விழுந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அந்த நபர் கீழே விழும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
0
0