திடீர் மின்சாரத் தடை..! அத்தியாவசிய தேவைகள் உட்பட ஒட்டுமொத்தமாக முடங்கிய மும்பை..!

Author: Sekar
12 October 2020, 1:59 pm
Mumbai_Power_Cut
Quick Share

மும்பை மற்றும் மும்பை பெருநகரத்திற்கு உட்பட்ட தானே, ராய்காட் மற்றும் பால்கர் பகுதிகள் இன்று மிகப்பெரிய மின் தடையால் செயலிழந்து முடங்கியது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

காலை 10.15 மணியளவில் டாடாவின் மின்சார விநியோக செயலிழப்பு காரணமாக மின்சாரம் தடைபட்டுள்ளது என்று மின்சார விநியோகஸ்தர்களில் ஒருவரான பெஸ்ட் கூறியுள்ளது.

மின்சாரத் தடை மும்பை – மத்திய ரயில்வே மற்றும் மேற்கு ரயில்வேயின் லைஃப்லைன்களைத் தாக்கியது. இதையடுத்து அனைத்து உள்ளூர் ரயில்களும் வசாய் மற்றும் திவா வரை செல்லும் வழியில் நிறுத்தப்பட்டுள்ளன.

பல இடங்களில் பயணிகள் கீழே குதித்து அருகிலுள்ள புறநகர் ரயில் நிலையத்திற்கு நடந்து செல்லத் தொடங்கினர்.

மும்பை மாநகராட்சியின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், தானேவின் கல்வாவில் டாடா பவர் சென்ட்ரல் கிரிட் செயலிழந்ததால் மின் தடை ஏற்பட்டதாகவும், மறுசீரமைக்க ஒரு மணி நேரம் ஆகலாம் என்றும் கூறினார்.

“டாடா பவர் நிறுவனத்தின் கிரிட் செயலிழப்பு காரணமாக 10.05 மணிநேரத்தில் இழுவை மின்சாரம் தடைபடுவதைக் கருத்தில் கொண்டு, சர்ச்கேட் மற்றும் போரிவிலிக்கு இடையிலான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இழுவை மின்சாரம் மீட்டமைக்கப்பட்டவுடன் இது மீண்டும் தொடங்கப்படும்” என்று மேற்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர் சுமித் தாக்கூர் தெரிவித்தார்.

எனினும், எம்.எஸ்.இ.டி.சி.எல்-ல் இருந்து மின்சாரம் வசாய் சாலையில் கிடைத்தது. மேலும் போரிவிலிக்கு விரார் பிரிவுக்கு இடையில் அத்தியாவசிய புறநகர் ரயில்கள் இயங்க இது நீட்டிக்கப்பட்டுள்ளது.

சர்ச்கேட்-போரிவாலி பிரிவில் சேவைகளைத் தொடங்க முயற்சிகள் நடந்து வருகின்றன. பயணிகள் பீதியடைய வேண்டாம் மற்றும் சமூக தூரத்தை பராமரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

மின்சாரம் செயலிழப்பு நீர் வழங்கல் கால அட்டவணையையும் தாக்கியது. சில கட்டிடங்களில் சிக்கிக்கொண்ட லிஃப்ட், சாலைகளில் குழப்பத்திற்கு வழிவகுக்கும் போக்குவரத்து சிக்கனல்கள் என ஒட்டுமொத்த நகரமும் முடங்கியதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Views: - 47

0

0