இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்து நிர்வாணக் கொலை : கல்லூரி மாணவன் உள்பட 2 பேர் கைது… விசாரணையில் அதிர்ச்சி தகவல்
Author: Babu Lakshmanan29 November 2021, 11:16 am
மும்பை : அடுக்குமாடி குடியிருப்பில் இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து நிர்வாணப்படுத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் மும்பையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குர்லா அடுத்த எச்டிஇஎல் காலனியில் பயன்பாட்டில் இல்லாத 13 மாடிக் கட்டிடம் உள்ளது. இந்தக் கட்டிடத்தை யாரும் பயன்படுத்தாதல், சிசிடிவி கேமிராக்கள் மற்றும் காவலாளிகள் என எந்த வசதிகளும் செய்யப்படவில்லை. இந்த சூழலில், 18 வயது இளைஞர் ஒருவர் தனது இரு நண்பர்களுடன் அந்தக் கட்டிடத்தின் மாடிக்கு சென்று வீடியோ பதிவு செய்ய சென்றுள்ளார்.
அப்போது, 13வது மாடியில் ஆடையின்றி நிர்வாணக் கோலத்தில் இளம்பெண் ஒருவர் சடலமாகக் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர், இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பெண்ணின் சடலத்தை மீட்டு, அவர் யார்..? எதற்காக கொலை செய்யப்பட்டார்..? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக முதலாமாண்டு பி.காம் மாணவர் உள்பட இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொலையான பெண் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதாகவும், அதனால், கல்லூரி மாணவருடன் சேர்ந்து இருவரும் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் மும்பையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
0
0