ஆசிரம மேலாளர் கொலை வழக்கு : சர்ச்சை சாமியார் குர்மீத் ராமிற்கு ஆயுள் தண்டனை விதிப்பு…ரூ.31 லட்சம் அபராதமாக செலுத்த உத்தரவு

Author: Babu Lakshmanan
18 October 2021, 5:59 pm
gurmeet-ram-rahim- updatenews360
Quick Share

அரியானா : ஆசிரம மேலாளர் கொலை வழக்கில் குர்மீத் ராம் ரஹீம் சிங் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை அளித்துள்ளது.

அரியானாவின் சிர்சா பகுதியில் தேரா சச்சா சவுதா என்னும் ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. குர்மீத் ராம் மீது பெண் துறவிகள் 2 பேரை பலாத்காரம் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கில் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும், 2002ம் ஆண்டு பத்திரிக்கையில் குர்மீத் ராம் ரஹீம் சிங் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வருவதாக சத்ரபதி என்பவர் செய்தி வெளியிட்டார். இதையடுத்து அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதைத் தொடர்ந்து, ஆசிரமத்தில் நடக்கும் முறைகேடுகள் பூரா சச் என்ற பெயரில் பத்திரிக்கைகளில் வெளியான நிலையில், ஆசிரம மேலாளர் ரஞ்சித் சிங் என்பவர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதுதொடர்பான வழக்கில் குர்மீத் ராம், கிருஷ்ணலால், ஜஸ்பீர் சிங், சப்தில் சிங், இந்திரசேனா உட்பட பலர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட குர்மீத் ராம் உள்பட 5 பேரும் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், 5 பேருக்கான தண்டனை விபரங்களை நீதிமன்றம் இன்று வெளியிட்டது. அதில், குர்மீத் ராம் ரஹீம் சிங்கி உள்பட 5 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. மேலும், குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு ரூ.31 லட்சமும், மற்ற 4 பேருக்கு தலா ரூ.50 ஆயிரமும் அபராதமாக விதிக்கப்பட்டது.

Views: - 266

0

0