உயிரை பறிக்கும் மர்ம ஆறு : குளிக்க சென்ற ஒரே கிராமத்தை சேர்ந்த 5 சிறுவர்கள் மாயம்.. 4 பேர் சடலமாக மீட்பு!!
Author: Udayachandran RadhaKrishnan11 January 2022, 11:42 am
ஆந்திரா : முன்னேரூ நதியில் குளிக்க சென்ற ஒரே கிராமத்தை சேர்ந்த ஐந்து சிறுவர்கள் அடுத்தடுத்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் 4 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள சந்திரபாடு அருகே இருக்கும் அட்டூரூ கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் ஐந்து பேர் தங்கள் பெற்றோர் வயல் வேலைக்கு சென்றிருந்த போது நேற்று தங்கள் ஊர் அருகே ஓடும் முன்னேரூ நதியில் குளிப்பதற்காக சென்றனர்.
அதன் பின் அவர்கள் வீடு திரும்பவில்லை.வேலை முடிந்து நேற்று மாலை தங்கள் குழந்தைகளை காணாமல் தேடிய பெற்றோர் அவர்களுடைய உடைகள் முன்னேரூ நதிக்கரையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
தொடர்ந்து இதுபற்றி அவர்கள் போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார், தீயணைப்பு துறையினர் ஆகியோர் தேசிய பேரிடர் மீட்பு குழுவின் உதவியுடன் சிறுவர்கள் 5 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இன்று காலை அவர்களில் நான்கு பேர் நதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் ஒரு சிறுவனை தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. இந்த சம்பவம் பற்றி சந்திரபாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
ஒரே கிராமத்தை சேர்ந்த 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஐந்து பேர் நதியில் மூழ்கி காணாமல் போன நிலையில் அவர்களில் நான்கு பேர் சடலமாக மீட்கப்பட்டு இருப்பது அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
0
0