நாக்பூரில் கடும் வெள்ளப்பெருக்கு..! இரண்டு துண்டாக உடைந்த பாலம்..! பழங்குடி கிராமங்களுடனான இணைப்பு துண்டிப்பு..!

31 August 2020, 9:57 am
nagpur_bridge_collapse_updatenews360
Quick Share

நாக்பூரில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையைத் தொடர்ந்து பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. மத்திய பிரதேசத்தில் ஆறுகளின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் மகாராஷ்டிராவின் பல ஆறுகளில் நீர் மட்டம் கடுமையாக உயர்ந்து வருவது தான் பாலம் இடிந்து விழுவதற்கு காரணம் என கூறப்படுகிறது. 

பாலம் இடிந்து விழுந்துள்ளதால் அப்பகுதியில் உள்ள கிராமங்கள் துண்டிக்கப்படுவதற்கு வழிவகுத்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். மேலும் உயர்ந்து வரும் நீர் ஆறுகளைச் சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களை பாதித்துள்ளது என்றும் கூறினார்.

“இப்போது நிலைமை தீவிரமாக உள்ளது. நிர்வாகம் தனது பங்கைச் செய்து வருகிறது. ஆனால் தண்ணீர் இன்னும் ஆழமாக உள்ளது. நிர்வாகம் நேற்று படகுகளைப் பயன்படுத்தி சிலரை மீட்டது” என்று உள்ளூர்வாசியான மகாதேவ் லக்ஷ்மன் ஷிண்டே கூறினார்.

ராம்தேக்கைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ஆஷிஷ் ஜெய்ஸ்வால், மத்தியப் பிரதேசத்தில் இருந்து மகாராஷ்டிரா அரசாங்கத்திற்கு வெள்ள எச்சரிக்கை வந்திருக்கிறதா என்பது குறித்து தனக்குத் தெரியாது என்றும், வெள்ளத்திற்கு முந்தைய வெளியேற்றத்திற்கு இன்னும் தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறினார்.

“மத்திய பிரதேசத்தில் ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியில் அதிக மழை பெய்தது. எனவே, அது அணையில் இருந்து அதிக அளவு தண்ணீரை வெளியேற்றியது. உயர்ந்து வரும் நீர்மட்டம் ஆற்றின் அருகே அமைந்துள்ள கிராமங்களில் பல வீடுகளை பாதித்துள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.” என்று ஜெய்ஸ்வால் கூறினார்.

“இந்த பாலம் 2015 மற்றும் 2018’க்கு இடையில் கட்டப்பட்டது. இது பழங்குடி சமூகங்களின் பல கிராமங்களை இணைக்கப் பயன்பட்டது. கட்டி சில ஆண்டுகளே ஆன பாலம் இடிந்து விழுந்துள்ளதால் இதில் அரங்கேறிய முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நான் கேட்டுக் கொண்டேன்.” என ஜெய்ஸ்வாஸ் மேலும் தெரிவித்தார்.

Views: - 0

0

0