லடாக் போர் நினைவுச் சின்னத்தில் பொறிக்கப்பட்டது கால்வான் மோதலில் இறந்த வீரர்களின் பெயர்கள்..!

By: Sekar
3 October 2020, 12:11 pm
Galwan_valley_UpdateNews360
Quick Share

ஜூன் 15’ம் தேதி கிழக்கு லடாக்கில் சீனாவுடன் நடந்த கால்வான் பள்ளத்தாக்கு மோதலில் கொல்லப்பட்ட 20 இந்திய வீரர்களின் பெயர்கள் கிழக்கு லடாக்கில் உள்ள போர் நினைவுச்சின்னத்தில் பொறிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.

கடந்த மே மாதம் கிழக்கு லடாக்கில் சீனப் படைகள் எல்லையில் அத்துமீறியதால் இரு தரப்புக்கும் இடையே மோதல் உருவானது. தொடர்ந்து நீடித்து வந்த மோதல், ஜூன் 14’ஆம் தேதி உச்சத்தை அடைந்து கடும் வன்முறை வெடித்தது. இதில் இந்தியத் தரப்பில் 20 பேர் பலியாகினர்.

கால்வான் பள்ளத்தாக்கின் ரோந்து புள்ளி 14’க்கு அருகே ஏழு மணி நேர பயங்கர மோதலில் கொல்லப்பட்ட 20 படையினரில் 16 பீகாரின் கட்டளை அதிகாரியான கர்னல் பி சந்தோஷ் பாபுவும் அடக்கம். சீன இராணுவம் மீது இந்தியவீரர்கள் நடத்திய பதிலடி தாக்குதலில் அதிக எண்ணிக்கையிலான சீன ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர். 

ஆனால் சீனா தனது வீரர்களின் உயிரிழப்புகளின் எண்ணிக்கையை இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இந்நிலையில் இந்தியத் தரப்பில் வீர மரணம் அடைந்த அனைத்து போர் வீரர்களின் பெயர்களும் தேசிய போர் நினைவுச்சின்னத்தில் பொறிக்கப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கால்வான் பள்ளத்தாக்கில் நடந்த இந்த மோதலில் 16 பீகார் ரெஜிமெண்டை தவிர, 3 பஞ்சாப், 3 நடுத்தர ரெஜிமென்ட் மற்றும் 81 பீல்ட் ரெஜிமென்ட்டைச் சேர்ந்த வீரர்களும் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Views: - 46

0

0