கொரோனா தொற்றால் பாஜக எம்பி காலமானார்..! மத்தியபிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இரங்கல்..!

2 March 2021, 12:03 pm
nand_kumar_bjp_mp_Updatenews360
Quick Share

பாரதீய ஜனதா எம்.பி. நந்தகுமார் சிங் சவுகான் இன்று காலை குருகிராமில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காலமானார். மத்திய பிரதேசத்தின் காண்ட்வாவைச் சேர்ந்த மக்களவை எம்பியான நந்தகுமாரின்  உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து போபாலில் இருந்து விரைந்து கொண்டு செல்லப்பட்ட பின்னர், குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

மேதாந்தா மருத்துவமனையில் சோதிக்கப்பட்டதில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்ததைத் தொடர்ந்து நந்தகுமார் சிங் சவுகான் கடந்த சில நாட்களாக வென்டிலேட்டர் ஆதரவில் வைக்கப்பட்டார். மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானும் பாஜக எம்.பி.யை மருத்துவமனையில் சந்தித்து அவரது உடல்நிலை குறித்து விசாரித்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் காலமானார்.

“பிரபலமான தலைவர் நந்து பயா எங்களை விட்டு விலகியுள்ளார். பாஜக ஒரு சிறந்த உழைப்பாளி, திறமையான அமைப்பாளர் மற்றும் அர்ப்பணிப்புள்ள தலைவரை இழந்துள்ளது. இது எனக்கு தனிப்பட்ட இழப்பு” என்று சிவராஜ் சிங் சவுகான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

காங்கிரசின் அருண் சுபாஷ் சந்திர யாதவிடம் தோற்ற 2009-14’ஆம் ஆண்டின் ஐந்தாண்டு காலத்தைத் தவிர்த்து, 1996 முதல் அவர் மக்களவையில் காண்ட்வா தொகுதியின் எம்பியாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 11

0

0