அடுத்தடுத்து கார் மோதி விபத்து : உயிர்தப்பிய ஆந்திர முன்னாள் முதலமைச்சர்!!

6 September 2020, 12:19 pm
Andhra Former CM Accident - Updatenews360
Quick Share

ஆந்திரா : வாகன விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உயிர் தப்பினார்.

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தனது காரில் விஜயவாடா பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அவருடைய காருக்கு முன்பும் பின்பும் தேசிய பாதுகாப்பு படையினர் சென்று கொண்டிருந்தனர்.

அபபோது திடீரென சாலையின் குறுக்கே ஒரு பசுமாடு குறுக்கிட்டதால் தேசிய பாதுகாப்பு படையினர் தங்களது வாகனத்தை உடனே நிறுத்தினர். இதனால் பின்னால் வந்த வாகனங்கள் அடுத்தடுத்து மோதியது.

இதில் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வந்த காரும் விபத்தில் சிக்கியது. இந்த நிலையில் அவருக்கு எந்த காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருப்பதி செல்லும் போது வாகன விபத்தில் சந்திரபாபு நாயுடு விபத்தில் சிக்கியது நினைவுகூறத்தக்கது.

Views: - 0

0

0