தேசம் விவாதங்களை எதிர்பார்க்கிறது..! பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளில் மோடி மெசேஜ்..!

29 January 2021, 11:25 am
Modi_Parliament_Press_meet_UpdateNews360
Quick Share

பிரதமர் நரேந்திர மோடி இன்று, இந்தியாவின் முன்னேற்றத்திற்கு வரவிருக்கும் 10 ஆண்டுகள் இன்றியமையாதது என்றும், “நமது நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய தலைவர்களின் பார்வை மற்றும் கனவுகளை நாம் நினைவில் கொள்ள வேண்டும்” என்றும் கூறினார். “சுதந்திர போராட்ட வீரர்கள் கண்ட கனவுகளை நிறைவேற்ற தேசத்தின் முன் ஒரு பொன்னான வாய்ப்பு வந்துவிட்டது” என்று அவர் கூறினார்.

“இந்த தசாப்தம் முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும். இதை மனதில் வைத்து, இந்த அமர்வில் தசாப்தத்தை மையமாகக் கொண்ட விவாதங்கள் இருக்க வேண்டும் என்பது தேசத்தால் எதிர்பார்க்கப்படுகிறது. மக்களின் அபிலாஷையை நிறைவேற்றுவதற்காக எங்கள் பங்களிப்பை வழங்குவதில் நாங்கள் பின்தங்க மாட்டோம் என்று நான் நம்புகிறேன்.” என அவர் பட்ஜெட் அமர்வின் முதல் நாளில் பாராளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் கூறினார்.

“இது பட்ஜெட் அமர்வு. இந்திய வரலாற்றில் முதல்முறையாக, ஒரு வகையில், நிதி அமைச்சர் 2020’ஆம் ஆண்டில் 4-5 மினி பட்ஜெட்டுகளை வெவ்வேறு நிதி ஊக்கத் தொகுப்புகளின் வடிவத்தில் முன்வைக்க வேண்டியிருந்தது. எனவே இந்த பட்ஜெட் அந்த 4-5 மினி பட்ஜெட்டுகளின் ஒரு பகுதியைப் போலவே இருக்கும் என நான் நம்புகிறேன்.” என்று அவர் கூறினார்.

இது குடியரசுத் தலைவரின் உரையை புறக்கணித்ததோடு, கூட்டத்தொடரை முடக்க நினைக்கும் எதிர்க்கட்சிகளுக்கு ஊடக சந்திப்பு மூலம் மோடி அனுப்பிய செய்தியாக பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், பட்ஜெட் அமர்வை முடக்கி செயல்பட விடாமல் தடுப்பதில் எதிர்க்கட்சிகள் மும்முரமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் முன்னோட்டமாக குடியரசுத் தலைவரின் உரையை புறக்கணிப்பதாக 18 எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளனன. 

விவசாயிகள் எதிர்ப்பு, மந்தநிலை, வேலை இழப்புகள், கொரோனா நெருக்கடியைக் கையாளுதல் மற்றும் சீனாவுடன் எல்லை மோதல் போன்ற பிரச்சினைகளில் அரசாங்கத்தை செயல்படவில்லை எனக் கூறி, நாடாளுமன்றத்தை முடக்க அவை திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில் குடியரசுத் தலைவரின் உரையைத் தொடர்ந்து பொருளாதார ஆய்வறிக்கை நிடோயமைச்சரால் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1’ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்ப்பிப்பார். பட்ஜெட் விளக்கக்காட்சிக்குப் பின்னர் ஜனாதிபதியின் உரையிற்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் குறித்து இரு அவைகளும் விவாதிக்கும்.

இந்த அமர்வு ஜனவரி 29 முதல் பிப்ரவரி 15 வரை மற்றும் மார்ச் 8 முதல் ஏப்ரல் 8 வரை இரண்டு பகுதிகளாக நடைபெறும். மொத்தம் 33 அமர்வுகள் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0