விவசாயிகளின் ஜனவரி 26 வன்முறையால் நாட்டிற்கு வேதனை..! 2021’ஆம் ஆண்டின் முதல் மான் கி பாத்தில் மோடி உரை..!

31 January 2021, 11:51 am
PM_Modi_UpdateNews360
Quick Share

இந்த ஆண்டு மான் கி பாத்தின் முதல் அத்தியாயத்தின் மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய மோடி, ஜனவரி 26 அன்று குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் தேசியக் கொடியை அவமதித்ததைக் கண்டு நாடு வருத்தமடைந்துள்ளதாக தெரிவித்தார்.

இது அவரது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியின் 73’வது பதிப்பாகும். இது மத்திய பட்ஜெட் 2021-22’ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக வருவது குறிப்பிடத்தக்கது.

72’ஆவது குடியரசு தினத்தையொட்டி விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பின் போது தேசிய தலைநகரின் பல பகுதிகளில் குழப்பமான காட்சிகள் காணப்பட்டன,டெல்லியின் பல பகுதிகளிலும் விவசாயிகள் வன்முறையில் ஈடுபட்டனர்.

பேரணிக்கு ஒரு நாள் முன்னதாக காவல்துறையினருக்கும் உழவர் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பின் போது தீர்மானிக்கப்பட்ட பாதைகளிலிருந்தும் எதிர்ப்பாளர்கள் விலகி, வன்முறையில் ஈடுபட்ட விவசாயிகள் உச்சகட்டமாக செங்கோட்டையின் மையத்தில் ஐ.டி.ஓவுக்குள் நுழைந்து அதன் குவிமாடங்கள் மற்றும் கோபுரங்களில் தங்கள் கொடிகளை ஏற்றி வைத்தது குறிப்பிடத்தக்கது.

பிரதமரின் மான் கி பாத் உரை : முக்கிய அம்சங்கள்

  • ஜனவரி 26’ம் தேதி குடியரசு தினத்தன்று தேசியக் கொடி அவமதிப்பைக் கண்டு நாடு மிகவும் வேதனையடைந்தது.
  • இந்தியா உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்தை இயக்குவது மட்டுமல்லாமல்,  குடிமக்களுக்கு உலகின் மிக விரைவான விகிதத்தில் தடுப்பூசி போடுகிறோம். 15 நாட்களில் நாடு 30 லட்சம் கொரோனா முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போட்டுள்ளது.
  • மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் துறையில் இந்தியா இன்று சுயசார்பு கொண்டுள்ளதால், இந்தியா மற்றவர்களுக்கும் உதவக்கூடிய தடுப்பூசி திட்டத்தை முன்னிலைப்படுத்தி வருகிறது.
  • பத்ம விருதுகள் அண்மையில் பாரம்பரியமற்ற ஹீரோக்களை கௌரவிக்கும் பாரம்பரியத்தைத் தொடர்கின்றன.
  • விவசாயத்தை நவீனமயமாக்குவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது. மேலும் பல நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அரசாங்கத்தின் முயற்சிகள் மேலும் தொடரும்.

Views: - 0

0

0