திருநங்கைகளின் உரிமைகளை நிலைநாட்ட தேசிய கவுன்சில்..! அரசிதழில் வெளியிட்டது மத்திய அரசு..!

22 August 2020, 12:34 pm
transgender_achieveres_updatenews360
Quick Share

மத்திய சமூக நீதி அமைச்சர் தலைமையில் திருநங்கைகளுக்கான தேசிய கவுன்சிலை மத்திய அரசு உருவாக்கியுள்ளது மற்றும் 10 மத்திய துறைகள், ஐந்து மாநிலங்கள் மற்றும் சமூக உறுப்பினர்களின் பிரதிநிதிகளை இந்த கவுன்சில் உள்ளடக்கியுள்ளது.

இந்தியாவின் முதல் திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019 இன் கீழ் இந்த தேசிய கவுன்சில் உருவாக்கப்பட்டதாக நேற்று மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுளளது.

சட்டத்தின் படி, கவுன்சில் பின்வரும் ஐந்து முக்கிய செயல்பாடுகளைக் கொண்டுள்ளது : 

  • திருநங்கைகள் தொடர்பாக கொள்கைகள், சட்டங்கள் மற்றும் திட்டங்களை உருவாக்குவது குறித்து மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்குதல் 
  • திருநங்கைகளின் சமத்துவம் மற்றும் முழு பங்களிப்பை அடைய வடிவமைக்கப்பட்ட கொள்கைகள் மற்றும் திட்டங்களின் தாக்கத்தை கண்காணித்தல் மற்றும் மதிப்பீடு செய்தல்
  • அனைத்து துறைகளின் நடவடிக்கைகளையும் மதிப்பாய்வு செய்தல் மற்றும் ஒருங்கிணைத்தல்
  • திருநங்கைகளின் குறைகளை நிவர்த்தி செய்தல்
  • மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட பிற செயல்பாடுகளைச் செய்தல்.

இந்த கவுன்சிலில் சுகாதாரம், வீடு, சிறுபான்மை விவகாரங்கள், கல்வி, கிராம அபிவிருத்தி, தொழிலாளர் மற்றும் சட்டம் ஆகிய அமைச்சகங்களின் கூட்டுச் செயலாளர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள். மேலும், ஓய்வூதியத் துறை, நிதி ஆயோக், தேசிய மனித உரிமைகள் ஆணையம் மற்றும் தேசிய பெண்கள் ஆணையம் ஆகியவற்றில் இருந்து ஒரு உறுப்பினர் இருப்பார்.

சுழற்சி அடிப்படையில் ஐந்து மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் ஆணையத்தின் உறுப்பினர்களாக இருப்பார்கள். தற்போது முதற்கட்டமாக ஜம்மு காஷ்மீர், ஆந்திரா, ஒடிசா, திரிபுரா மற்றும் குஜராத் மாநிலங்களின் பிரதிநிதிகள் இந்த கவுன்சிலில் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருநங்கை சமூகத்தைச் சேர்ந்த ஐந்து உறுப்பினர்களும், அரசு சாரா நிறுவனங்களைச் சேர்ந்த ஐந்து நிபுணர்களும் இந்த கவுன்சிலுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

Views: - 30

0

0