இந்தியாவுக்கு இன்று துக்க நாள் : ராணி எலிசபெத் மறைவுக்கு நாடு முழுவதும் அரைக்கம்பத்தில் பறந்த தேசியக்கொடி!!

Author: Udayachandran RadhaKrishnan
11 September 2022, 12:08 pm
Elizabeth Flag - updatenews360
Quick Share

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்துக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, மகாராணியின் அதிகாரப்பூர்வ மருத்துவக்குழுவினர் மகாராணி எலிசபெத்துக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மகாராணி எலிசபெத் உயிரிழந்தார். அவருக்கு வயது 96. அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவில் எலிசபெத்தின் மறைவையொட்டி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. மேலும், செப்டம்பர் 11ம் தேதி நாடு முழுவதும் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் எனவும், அன்றைய நாள் அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், ராணி எலிசபெத்தின் மறைவுக்கு தமிழக அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை தலைமைச்செயலகம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தேடிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.

Views: - 361

0

0