முழு வெளிப்படைத்தன்மைக்கு தேசிய மருத்துவ ஆணையம்..! டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் மோடி உரை..!

26 February 2021, 12:56 pm
narendra_modi_mgr_updatenews360
Quick Share

இந்தியாவில் தற்போது முழு மருத்துவக் கல்வி மற்றும் சுகாதாரத் துறையையும் மத்திய அரசாங்கம் மாற்றி வருகிறது என்றும் தேசிய மருத்துவ ஆணையம் மிகுந்த வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி இன்று தெரிவித்தார்.

தமிழ்நாடு டாக்டர்எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் 33’வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் வீடியோ கான்பெரன்ஸ் முறையில் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார்.
“நண்பர்களே நாங்கள் முழு மருத்துவக் கல்வி மற்றும் சுகாதாரத் துறையை மாற்றியமைக்கிறோம்.” என்று அவர் வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றினார்.

மேலும் தேசிய மருத்துவ ஆணையம் பெரும் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதோடு, புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கான விதிமுறைகளையும் எளிதாக்கும் என்று அவர் குறிப்பிட்டார். இது இந்தத் துறையில் மனித வளங்களின் தரம் மற்றும் கிடைக்கும் தன்மையையும் மேம்படுத்தும் என்று அவர் மேலும் கூறினார்.

கடந்த ஆறு ஆண்டுகளில், எம்பிபிஎஸ் இடங்கள் 30,000’க்கும் அதிகமாக அதிகரித்துள்ளன. இது 2014’ஐ விட 50 சதவீதத்திற்கும் அதிகமாகும்.

முதுகலை இடங்களின் எண்ணிக்கை 24,000 அதிகரித்துள்ளது. இது 2014’ஐ விட 80 சதவீதம் அதிகரித்துள்ளது. 2014’ஆம் ஆண்டில், நாட்டில் ஆறு எய்ம்ஸ் இருந்தன. கடந்த ஆறு ஆண்டுகளில், நாடு முழுவதும் மேலும் 15 எய்ம்ஸுக்கு ஒப்புதல் அளித்துள்ளோம்.” என்று மோடி மேலும் கூறினார்.

Views: - 5

0

0