தேசிய காவல்துறை நினைவு தினம்: பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி..!!

Author: Aarthi Sivakumar
21 October 2021, 9:36 am
Quick Share

புதுடெல்லி: இன்று நாடு முழுவதும் காவலர் வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு நாடு முழுவதும் பணியின் போது உயிர்த்தியாகம் செய்த போலீசாருக்கு தலைவர்கள் மரியாதை செலுத்துகின்றனர்.

Image

காவல்துறையினர் தங்கள் கடமைகளைச் செய்யும்போது உயிரைத் தியாகம் செய்த துணிச்சலான காவலர்களை நினைவில் வைத்திருப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ம் தேதியன்று தேசியக் காவல்துறை நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

Image

கடந்த 2018ம் ஆண்டு காவல்துறை நினைவு தினத்தை முன்னிட்டு கடந்த ஆண்டு டெல்லியில் இந்தியாவின் முதலாவது தேசிய காவல் துறை அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இந்நிலையில், இன்று நாடு முழுவதும் காவலர் வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

Image

மேலும், தனது ட்விட்டர் பக்கத்தில், ” காவல்துறை நினைவு தினத்தன்று சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்கவும், மற்றவர்களுக்கு தேவையான நேரங்களில் உதவி செய்யவும் நமது காவல் படைகளின் சிறந்த முயற்சிகளை நான் ஒப்புக்கொள்ள விரும்புகிறேன். கடமையின் போது தனது இன்னுயிரை நீத்த அனைத்து காவல்துறை வீரர்களுக்கும் அஞ்சலி செலுத்துகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

Views: - 576

0

0