தேசிய வாக்காளர் தினம் : மின்னணு வாக்காளர் புகைப்படம் அடையாள அட்டை இன்று அறிமுகம்!!

25 January 2021, 9:22 am
Voter Id - Updatenews360
Quick Share

மின்னணு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிமுகம் செய்கிறது.

க்யூ ஆர் கோடு வசதியுடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை கடந்த 1950ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி ஏற்படுத்தப்பட்டது. இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் அதன் தொடக்க தினம் கொண்டாடப்படுகிறது.

61வது துவக்க தினம் கொண்டாடப்பட்ட 2011ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் அமைச்சரவை கூட்டத்தில் வாக்காளர் தினம் தொடர்பாக சட்ட அமைச்சக முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதன் பெயரில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய வாக்காளர் தினம் அனுசரிக்கப்பட்டு வாக்குரிமையை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி அனைவரையும் வாக்களிக்க வைக்கும் நோக்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதி தேசிய வாக்காளர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இன்று 11வது தேசிய வாக்காளர் தினம் கடைபிடிக்கப்பட உள்ளது. இதை முன்னிட்டு டெல்லியில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் காணொலி வாயிலாக கலந்து கொள்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் ஹலோ வாக்காளர்கள் என்ற பெயரில் இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதள ரேடியோவை அவர் துவக்கி வைக்கிறார்,

மேலும் மின்னணு வாக்காளர் அடையாள அட்டையையும் வழங்குகிறார், முதல் முறை வாக்களிப்பதற்காக மொபைல் எண்ணுடன் விண்ணப்பித்துள்ள புதிய வாக்காளர்கள் அனைவருக்கும் வரும் 25ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை இ-இபிக் என்னும் மின்னணு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.

க்யூ ஆர் கோமு வசதியுடை இந்த அட்டை வலைதளம் மூலம் மொபைல் போன் அல்லது கணிணியில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும், மேலும் இரண்டாம் கட்டமாக வரும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அனைத்து வாக்காளர்களுக்கு பதிவிறக்கம் செய்து கொள்ள அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

Views: - 0

0

0