பாராகிளைடிங் பயிற்சியில் ஈடுபட்ட கடற்படை அதிகாரி – கடலில் விழுந்து பலியான சோகம்

Author: Aarthi
3 October 2020, 1:38 pm
paracliding - updatenews360
Quick Share

கர்நாடகா: பாராகிளைடிங் சாகச பயிற்சியில் ஈடுபட்ட கடற்படை அதிகாரி கிளைடரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கடலில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

கர்நாடக மாநிலம் கார்வார் பகுதியை சேர்ந்தவர் இந்திய கடற்படை கேப்டன் மதுசூதன ரெட்டி. இவர் தன் குடும்பத்தினருடன் கடற்கரைக்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது பாராகிளைடிங் சாகசத்தில் ஈடுபட்டார்.

கொரோனா காரணமாக தடை செய்யப்பட்டிருந்த பாராகிளைடிங் விளையாட்டு கடந்த வெள்ளியன்று மீண்டும் தொடங்கப்பட்டது. கார்வாரில் உள்ள ரவீந்திரநாத் தாகூர் கடற்கரைக்கு சென்ற மதுசூதன ரெட்டி, 100 மீட்டர் தொலைவில் பாராகிளைடரில் பறந்து கொண்டிருந்தபோது, இயந்திர கோளாறு காரணமாக கடலில் விழுந்தார்.

உடனடியாக மீனவர்களால் மீட்கப்பட்ட மதுசூதன ரெட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

Views: - 40

0

0