அது போன வாரம்.. இது இந்த வாரம் : ராஜினாமா கடிதத்தை திரும்ப பெற்ற நவ்ஜோத்சிங் சித்து!!

Author: Udayachandran RadhaKrishnan
16 October 2021, 6:36 pm
Siddhu -Updatenews360
Quick Share

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத்சிங் சித்து நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் வீரராக இருந்த நவ்ஜோத் சிங் சித்து கடந்த 2004-ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். பின்னர், ராஜ்யசபா எம்.பியாக இருந்த போது பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார்.

காங்கிரஸில் இணைந்த போதிலிருந்தே முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங்குடன் மோதல் போக்கு இருந்து வந்தது. இதன் விளைவாக கடந்த சில தினங்களுக்கு முன் திடீரென முதல்வர் பதவியை அமரிந்தர் சிங் ராஜினாமா செய்து, காங்கிரஸ் கட்சியில் தான் அவமானப்படுத்தப்பட்டதாகவும் கூறினார்.

புதிய முதல்வராக சரன்ஜித் சிங் சன்னி பதவியேற்ற நிலையில் திடீரென பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை நவ்ஜோத் சிங் சித் ராஜினாமா செய்தார்.
பல்வேறு விமர்சனங்கள் எழுந்ததை தொடர்ந்து, நவ்ஜோத் சிங் சித்வை காங்கிரஸ் தலைமை சமாதானம் செய்ய முயற்சி செய்தது. இதனால், நேற்று டெல்லிக்கு சென்ற நவ்ஜோத் சிங் சித் ராகுல் காந்தி மற்றும் கே.சி.வேணுகோபாலை சந்தித்து பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சித்து, நான் காங்கிரஸ் தலைவராக தொடர்வேன். எனக்கு இருந்த அனைத்துப் பிரச்சினைகளும் சுமுகமான முறையில் தீர்வு காணப்பட்டிருப்பதாக கூறினார்.

Views: - 224

0

0