நயன்தாராவின் வீட்டில் என்ன ஆச்சு…? திடீரென மருத்துவமனையில் குவிந்ததற்கு என்ன காரணம்… பரபரப்பில் திரையுலகம்

9 July 2021, 1:23 pm
Nayanthara- Updatenews360
Quick Share

கேரளா : லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் தந்தை உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் திரைப்படமான ஐயா படம் மூலம் அறிமுகமாகி தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையானவர் நயன்தாரா. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென தனி பாணியை உருவாக்கி லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களாக அழைக்கப்பட்டு வருபவர் நயன்தாரா.

கேரளாவை பூர்விகமாக கொண்ட நயன்தாராவின் தந்தை குரியன் இந்திய விமானப்படையில் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். தற்போது மனைவி ஓமனா குரியனுடன் கேரள மாநிலம் கொச்சியில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நயன்தாராவின் தந்ரைதை குரியன் இன்று உடல்நிலை மோசமடைந்ததால் கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்து கண்காணித்து வருகின்றனர். இதனால் நயன்தாராவின் ரசிகர்கள் கவலையில் உள்ளது மட்டுமல்லாமல் குரியன் குணமடைய வேண்டி பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Views: - 626

42

22