ராஜஸ்தான் சம்பல் நதியில் படகு கவிழ்ந்து விபத்து..! 12 பேர் மாயம்..! மீட்புப் பணிகள் தீவிரம்..!

16 September 2020, 2:48 pm
Boats_Updatenews360
Quick Share

ராஜஸ்தானின் பூண்டி மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு 40 பக்தர்களை ஏற்றிச் சென்ற படகு இன்று காலை சம்பல் ஆற்றில் கவிழ்ந்ததில் சுமார் 10-12 பேர் காணாமல் போயுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே சுமார் 25 பேர் மீட்கப்பட்டனர். கோட்டாவின் கட்டோலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திப்ரி சம்பல் பகுதிக்கு அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.

“இன்று காலை 8.45 மணியளவில் கோட்டா மாவட்டத்தின் கட்டோலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சம்பல் ஆற்றில் பூண்டி மாவட்டத்தின் இந்தர்கர் பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு 40 பக்தர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது” என்று கோட்டா கிராமத்து காவல் கண்காணிப்பாளர் ஷரத் சவுத்ரி தெரிவித்தார்.

சுமார் 20-25 பேர் நீந்தியோ மீட்கப்பட்டோ கரையை அடைந்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் 10-12 பேர் காணாமல் போயுள்ளதாக எஸ்.பி. கூறினார். அவரும் கோட்டா மாவட்ட மீட்புப் படையினருடன் சம்பவ இடத்தில் உள்ளார்.

தொடர்ந்து மீட்பு நடவடிக்கை நடந்து வருவதாக சவுத்ரி தெரிவித்தார்.

புதன்கிழமை காலை கட்டோலி காவல் நிலையப் பகுதியில் உள்ள கிராமங்களிலிருந்து பூண்டி மாவட்டத்தின் இந்தர்கர் பகுதியில் உள்ள கமலேஷ்வர் மகாதேவ் கோவிலுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 40–50 பேர் புறப்பட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.

Views: - 0

0

0