ஒரே நாளில் 594 பேருக்கு கொரோனா..! கும்பமேளாவில் குவியும் கூட்டத்தால் கொரோனா பன்மடங்கு உயரும் என அச்சம்..!

14 April 2021, 12:52 pm
haridwar_kumbh_corona_updatenews360
Quick Share

கொரோனாவின் இரண்டாவது அலைகளின் கீழ் நாடு தத்தளித்து வரும் நிலையில், பல மாநிலங்கள் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்ற போதிலும், பக்தர்கள் தொடர்ந்து நடந்து வரும் கும்பமேளாவில் பங்கேற்க ஹரித்வாரில் திரள்கிறார்கள். இந்நிலையில் ஹரித்வாரில் நேற்று ஒரே நாளில் 594 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது நகரத்தின் மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கையை 2,812’ஆகக் கொண்டுள்ளது.

கும்ப மேளாவின் இன்றைய மூன்றாவது ஷாஹி ஸ்னான் நிகழ்வில் கங்கையில் நீராட ஆயிரக்கணக்கானோர் ஹரித்வாரில் திரண்டு வரும் நிலையில், ஆன்மீக நகரம் ஒரு புதிய கொரோனா ஹாட்ஸ்பாட்டாக உருவெடுத்துள்ளது. 

முன்னதாக திங்களன்று, நகரத்தில் 408 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இந்த நிகழ்வில் பங்கேற்க பக்தர்களுடன், 13 அகதாக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களும் இங்கு வந்துள்ளனர். கொரோனாவுக்கு பல பார்வையாளர்கள் நேர்மறை சோதனை செய்துள்ளனர்.

மாநில சுகாதாரத் துறையின் கூற்றுப்படி, உத்தரகண்ட் நேற்று கொரோனா வைரஸ் பாதிப்புகள் மற்றும் இறப்புகளில் அதிக ஒற்றை நாள் உயர்வைப் பதிவு செய்துள்ளது. நேற்று மட்டும் 1,925 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 13 நோயாளிகள் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1,12,071 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 1,780 ஆகவும் உயர்ந்தது. 

ஹரித்வாரில் நடந்த கும்ப மேளாவில் பங்கேற்க கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் கங்கைக் கரையில் திரண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பக்தர்கள் கொரோனா நெறிமுறையை பின்பற்றாமல் முககவசம் இல்லாமல் சுற்றித் திரிவதாலும், எந்தவிதமான சமூக இடைவெளியையும் பின்பற்றாமல் செல்வதைக் காண முடிகிறது.

இதனால் ஹரித்வாரில் கொரோனா பாதிப்புகள் பல மடங்கு உயரும் என அஞ்சப்படுகிறது.

Views: - 26

0

0