சட்ட விரோத மதுபானம்..! பஞ்சாப் முதல்வர் மீது அதிகரிக்கும் அதிருப்தி..! சொந்த கட்சி எம்பிக்கள் விமர்சனம்..!

8 August 2020, 3:35 pm
congress_mp_pratap_bajwa_updatenews360
Quick Share

பஞ்சாப் அரசாங்கத்திற்கு கவலை அளிக்கும் மற்றொரு அடையாளமாக, காங்கிரஸ் எம்.பி.பிரதாப் சிங் பஜ்வா, முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்கை பதவியிலிருந்து நீக்க வேண்டும் எனக் கூறி புதிய கட்சிப் பூசலைத் தொடங்கி வைத்துள்ளார். மேலும் மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்ட விரோத மதுபானம் குறித்த வலக்கை சிபிஐ அல்லது அமலாக்க இயக்குனரகம் விசாரிக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

சட்டவிரோத மதுபானம் காரணமாக 121 பேர் உயிரிழந்தது குறித்து ஊடகங்களுடன் பேசிய பஞ்சாப் காங்கிரஸ் எம்.பி., “முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் அவருக்கு கீழ் கலால் மற்றும் வரிவிதிப்பு, உள்துறை மற்றும் போலீசை வைத்துள்ளார். இந்த விவகாரத்தில் அனைத்து நடவடிக்கைகளும் கலால் துறையையே குற்றம் சாட்டுகின்றன” என்று கூறினார்.

“போலி மதுபானம் குடித்து இறந்த 121 பேருக்கு நீதி வழங்கப்பட வேண்டுமானால், மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) அல்லது அமலாக்க இயக்குநரகம் (இடி) விசாரணை நடத்த வேண்டும்” என்று அவர் மேலும் கூறினார்.

பஞ்சாப் முதல்வர் மீது தனது தாக்குதலை கடுமையாக்கிய பிரதாப் பஜ்வா, பாதலின் ஆட்சியின் கீழ் நிறுவப்பட்ட சுரங்க, மதுபானம், கேபிள், போதைப்பொருள் மற்றும் போக்குவரத்து மாஃபியாக்கள் கேப்டன் அமரீந்தர் சிங்கின் நிர்வாகத்தின் கீழ் செழித்து வருகின்றன என்று கூறினார்.

பின்னர் அவர், “காங்கிரஸின் எதிர்காலம் காப்பாற்றப்பட வேண்டுமானால், நாம் மாநிலத்தில் தலைமையை மாற்ற வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

இதற்கிடையே போலி மதுபான சோகம் தொடர்பாக காங்கிரஸ் தலைமையிலான பஞ்சாப் அரசாங்கத்தை பகிரங்கமாக விமர்சித்ததற்காக காங்கிரஸ் தலைமை பிரதாப் சிங் பஜ்வா மீது கோபம் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக வியாழக்கிழமை, முழு பஞ்சாப் அமைச்சரவையும் கட்சி விரோத மற்றும் அரசாங்க விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக காங்கிரஸ் கட்சியின் மற்றொரு எம்.பி. சம்ஷெர் சிங் துள்ளோவும் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சொந்த கட்சியினரின் விமர்சனங்களுக்கு எதிராக அமைச்சர்கள் வெளியிட்டுள்ள ஒரு கூட்டு அறிக்கையில், இரண்டு எம்.பி.’க்கள் மீதும் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் தலைமையிடம் வலியுறுத்தியுள்ளனர்.

Views: - 1

0

0