நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்..! தற்கொலை செய்துகொண்ட மாணவி..! மறுமதிப்பீட்டில் 590 மதிப்பெண்கள் வந்ததால் அதிர்ச்சி..!

23 October 2020, 5:52 pm
Suicide_UpdateNews360
Quick Share

நீட் 2020 முடிவுகளில் தனக்கு குறைந்த மதிப்பெண்கள் வந்ததால் மன உளைச்சலுக்கு ஆளான மத்திய பிரதேசத்தின் சித்வாராவில் 19 வயது மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பின்னர், அவரது பெற்றோர் அவரது ஓஎம்ஆர் தாளைச் சோதித்தபோது, தங்கள் மகள் 590 மதிப்பெண்கள் பெற்றிருப்பதை கண்டதும் அதிர்ச்சியடைந்தனர்.

டாக்டராக ஆசைப்பட்ட சூரியவன்ஷி, மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு கடினமாகப் படித்தார். நுழைவுத் தேர்வு முடிவில் குறைந்த மதிப்பெண்கள் பெறுவார் என்று அவரது பெற்றோர் ஒருபோதும் நம்பவில்லை. எனவே அவர்கள் நீட் ஓஎம்ஆர் தாளை மீண்டும் சோதிக்க நினைத்தனர்.

இந்நிலையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீட் தேர்வால் மாணவர்கள் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்வது இது முதல் முறை அல்ல. கடந்த வாரம், 18 வயது மாணவி லூதியானாவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் 10 மற்றும் 12’ஆம் வகுப்புகளில் தனது வகுப்பில் முதலிடம் பிடித்தும் நீட் தேர்வில் மிகக் குறைந்த மதிப்பெண் பெற்றதால் இந்த விபரீத முடிவை எடுத்தார்.

முன்னதாக கடந்த மாதம், தமிழக மாணவர்கள் சிலரும் நீட் தேர்வு நடப்பதற்கு முன்னதாகவே, தேர்வு பயத்தில் தற்கொலை செய்து கொண்டது தமிழகத்தில் நீட்டுக்கு எதிராக போராட்டம் நடக்க வழிவகுத்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், மருத்துவ நுழைவுத் தேர்வில் தோல்வியடைந்த ஒரு நீட் மாணவர், மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்படித்து எஸ்.டி பிரிவில் அகில இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்தார்.

நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி ஏற்பட்டு மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தேசிய தேர்வு முகமை எந்தவித குளறுபடிக்கும் இடம் கொடுக்காமல் தேர்வுகளை நடத்தி முடிவுகளை அறிவிக்க வேண்டும் என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Views: - 19

0

0