“வாங்க பேசித் தீர்ப்போம்”..! எல்லைப் பிரச்சினை குறித்து பேச இந்தியாவுக்கு நேபாளம் அழைப்பு..!

16 January 2021, 3:17 pm
India_Nepal_UpdateNews360
Quick Share

இந்தியா-நேபாள எல்லைப் பிரச்சினையை விரைவில் தீர்க்க வேண்டும் என்று நேபாள வெளியுறவு அமைச்சர் பிரதீப் குமார் கியாவாலி இன்று அழைப்பு விடுத்தார். இந்தியா-நேபாள கூட்டுக் கூட்டத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன் பேசியபோது, ​​பிரச்சினைகளை தீர்ப்பது இரு நாடுகளின் உறுதிப்பாடாகும் என்று அவர் தெரிவித்தார். 

எல்லையில் சுமார் 97 சதவீதம் இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், எல்லையின் புனிதத்தன்மையை பராமரிக்க வேண்டும் மற்றும் எல்லை நிர்ணயம் முக்கியமானது என்று தெரிவித்தார். 

மேலும் சர்ச்சைக்குரிய கலபானி பகுதி தொடர்பாக நேபாளத்தின் நிலைப்பாட்டில் நம்பிக்கை தெரிவித்த அவர், நேபாளத்தின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்த இங்கு வரவில்லை என்றும் அதை வரலாற்று ஆவணங்கள் பேசும் என்றும் கூறினார்.

இந்தியா-நேபாள எல்லையின் வரைபடம் 1981’இல் தொடங்கியது. ஆனால் இரண்டு பிரிவுகள் வரைபடப்படுத்தப்படவில்லை, கலபானி அவற்றில் ஒன்று என்று கியாவாலி கூறினார். இந்திய சர்வேயர் ஜெனரல் மற்றும் நேபாள பிரதிநிதி தலைமையில் ஒரு எல்லை செயல்பாட்டுக் குழு உள்ளது. ஆனால் இரு வெளியுறவு செயலாளர்களும் அதைப் பார்க்க வேண்டும். இந்த தீர்மானம் இரு நாடுகளையும் வரலாற்று சிக்கல்களில் இருந்து விடுவிக்கும் என்று அமைச்சர் கூறினார்.

எல்லைப் பிரச்சினை நீடித்து வந்தாலும், இந்திய இராணுவத்தின் கூர்க்கா படைப்பிரிவுகளில் தொடர்ந்து பணியாற்ற நேபாளம் தனது குடிமக்களை அனுமதிக்கும் என்று அவர் இந்தியாவிற்கு உறுதியளித்துள்ளார். எனினும் இந்த விவகாரத்தில் விவாதம் நடந்து வருகிறது என ஒப்புக்கொண்ட அவர், தற்போதைய கொள்கையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றார்.

கே.பி.சர்மா ஒலி நாடாளுமன்றத்தை கலைக்க வழிவகுத்த நேபாள அரசாங்கத்திற்குள் உள்ள வேறுபாடுகள் குறித்து கியாவாலி கவலைகளை வெளிப்படுத்தியதோடு, இந்த நடவடிக்கை, நீண்ட உட்கட்சி பிரச்சினைகளின் விளைவாகும் என்று அவர் கூறினார். இதற்காக தான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை என்று அவர் கூறினார்.

Views: - 5

0

0