சுதந்திர தினத்தில் மோடிக்கு போன் போட்ட நேபாள பிரதமர்..! என்ன பேசினார் தெரியுமா..?

15 August 2020, 4:42 pm
Modi_Oli_UpdateNews360
Quick Share

இந்தியாவின் 74’ஆவது சுதந்திர தினத்தன்று இந்தியப் பிரதமர் மோடிக்கு போன் செய்த நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி, இந்திய சுதந்திர தினத்திற்கும், ஐ.நா.பாதுகாப்புக் குழுவின் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியாவின் சமீபத்திய தேர்வுக்கும் மோடியை வாழ்த்தினார் என பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“இரு நாடுகளிலும் கொரோனா தொற்றுநோயின் தாக்கத்தை குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட பின்னணியில் தலைவர்கள் பரஸ்பர ஒற்றுமையை வெளிப்படுத்தினர். இது தொடர்பாக நேபாளத்திற்கு இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவை பிரதமர் வழங்கினார்.” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 9 அன்று, கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்திற்காக இந்தியா 10 வென்டிலேட்டர்களை நேபாளத்திடம் ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது.

மோடி, தொலைபேசி அழைப்பிற்கு நேபாள பிரதமருக்கு நன்றி தெரிவித்ததோடு, இந்தியாவும் நேபாளமும் பகிர்ந்து கொள்ளும் நாகரிக மற்றும் கலாச்சார தொடர்புகளை நினைவு கூர்ந்தார்.

நேபாளம் சமீபத்தில் உத்தரகண்டின் சில பகுதிகளை அதன் பிரதேசமாகக் காட்டும் புதிய வரைபடத்தை வெளியிட்டதையடுத்து, இந்தோ-நேபாள உறவுகள் ஒரு கடினமான சூழ்நிலையில் உள்ள சமயத்தில், ஒலியின் தொலைபேசி அழைப்பு முக்கியத்துவம் பெறுகிறது. மேலும் முன்னதாக நேற்று, மோடியை  சர்மா ஒலி ட்விட்டரில் வாழ்த்தி பதிவு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

74’வது சுதந்திர தினத்தின் மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தில் பிரதமர் ஸ்ரீ நரேந்திரமோடி ஜி, அரசு மற்றும் இந்திய மக்களுக்கு வாழ்த்துக்கள். இந்திய மக்களின் முன்னேற்றம் மற்றும் செழிப்புக்கு வாழ்த்துக்கள்.” என்று அவர் தன்னுடைய ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

Views: - 10

0

0