விவசாயத்துறையில் மாபெரும் புரட்சி… 35 புதிய பயிர் வகைகள் அறிமுகம் : சத்தான விதைகளே நமது நோக்கம் – பிரதமர் மோடி பேச்சு

Author: Babu Lakshmanan
28 September 2021, 1:51 pm
pm modi - updatenews360
Quick Share

பருவநிலை மாற்றம், புதிய சவால்களுக்கு இடையே சத்தான விதைகளே நமது நோக்கம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

விவசாயத்துறையில் மாபெரும் புரட்சி ஏற்படுத்தும் விதமாக, பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட 35 புதிய வகை பயிர்களை பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார்.

காணொளி காட்சியின் மூலம் நடந்த இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது :-
கடந்த 7 ஆண்டுகளில் விவசாயத்தில் ஏற்பட்ட சவால்களை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் தீர்வு கண்டுள்ளோம். காலநிலை மாற்றத்தினால் நோய்கள் மற்றும் அழிவுகள் என அடுத்தடுத்து புதுபுதுப் பேரிடர்களை நாம் எதிர்கொண்டு வருகிறோம். எனவே, பருவநிலை மாற்றத்தை தடுக்க ஆய்வுகள் தேடப்படுகிறது.

மாறி வரும் பருவநிலை, புதிய சவால்களுக்கு இடையே சத்தான விதைகளே நமது நோக்கமாக உள்ளது. அறிவியல், அரசு மற்றும் சமுதாயம் ஆகிய மூன்றும் இணைந்தால் மட்டுமே மிகச் சிறப்பாக செயல்பட முடியும், எனக் கூறினார்.

Views: - 140

0

0