உள்நாட்டு நிறுவனங்களுக்கு முக்கியத்துவம்..! பாதுகாப்புக் கொள்முதலுக்கு புதிய நடைமுறைகள் வெளியீடு..!

28 September 2020, 6:16 pm
Rajnath_Singh_Release_New_DAP_UpdateNews360
Quick Share

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று நடைபெற்ற பாதுகாப்பு கையகப்படுத்தல் கவுன்சில் (டிஏசி) கூட்டத்தில் புதிய பாதுகாப்பு கையகப்படுத்தல் நடைமுறைகளை (டிஏபி) வெளியிட்டார். கூட்டத்தில் முப்படைகளின் தலைவர்களான ஜெனரல் எம்.எம்.நாரவனே, அட்மிரல் கரம்பீர் சிங் மற்றும் ஏர் மார்ஷல் ஆர்.கே.எஸ் பதோரியா மற்றும் சி.டி.எஸ் ஜெனரல் பிபின் ராவத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

எதிர்காலத்தில் இந்தியாவில் பாதுகாப்பு கையகப்படுத்துதலுக்கான கீதையாக செயல்படும் புதிய ஆவணத்தை வெளியிட்ட பின்னர், பிரதமர் நரேந்திர மோடியின் ஆத்மநிர்பர் பாரத்தின் பார்வைக்கு ஏற்ப இந்த நடைமுறைகள் உள்ளன என்று சிங் கூறினார். 
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘டிஏபி 2020 இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்றுவதற்கான இறுதி நோக்கத்துடன் மேக் இன் இந்தியா மூலம் இந்திய உள்நாட்டு தொழில்துறையை மேம்படுத்தும்’ என்றார்.

ஆஃப்செட் வழிகாட்டுதல்களும் திருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் உதிரி பாகங்களின் தயாரிப்புக்குப் பதிலாக முழுமையான பாதுகாப்பு தயாரிப்புகளை உற்பத்தி செய்வதற்கு முன்னுரிமை வழங்கப்படும்.

“டிஏபி 2020’இன் உருவாக்கம் பரந்த அளவிலான பங்குதாரர்களின் கருத்துகளையும் பரிந்துரைகளையும் இணைத்த பின்னர் செய்யப்பட்டுள்ளது” என்று ராஜ்நாத் சிங் கூறினார்.

மதிப்பீடுகளின்படி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்திய ஆயுதப்படைகள் சுமார் 130 பில்லியன் அமெரிக்க டாலர் மூலதன கொள்முதல் செய்வதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பெரும்பாலான கொள்முதல் உள்நாட்டிலிருந்து இருக்க வேண்டும் என திட்டமிட்டு மத்திய அரசு தீவிர செயலாற்றி வருகிறது.

Views: - 8

0

0