சென்னை-கெவாடியா இடையே புதிய எக்ஸ்பிரஸ் ரயில்: இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி..!!

17 January 2021, 7:30 am
PM_Modi_UpdateNews360
Quick Share

சென்னை: சென்னை-கெவாடியா இடையே புதிய எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து குஜராத்தில் உள்ள கெவாடியா ரயில் நிலையத்துக்கு 6 எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் கெவாடியா-பிரதாப் நகர் இடையே எம்.இ.எம்.யு. ரெயில்களின் சேவைகள் இன்று தொடங்கப்பட உள்ளது.

சென்னை-கெவாடியா இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலின் தொடக்க நிகழ்ச்சி இன்று காலை 11 மணி அளவில் சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் நடைபெற உள்ளது. இந்த ரயிலை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய ரயில்வே மந்திரி பியூஷ் கோயல், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அ.தி.மு.க. எம்.பி. நவநீதகிருஷ்ணன், தி.மு.க. எம்.பி.க்கள் தயாநிதிமாறன், டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, பி.வில்சன், எம்.எல்.ஏ.க்கள் பி.கே.சேகர்பாபு, கே.எஸ்.ரவிசந்திரன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

Views: - 0

0

0