என்ன பாத்தா யாருன்னு கேட்ட? இதுதான் உனக்கு தண்டனை.. அது என்னனு தெரியுமா?

16 January 2021, 10:09 am
Quick Share

சாதாரண உடையில் இருந்த கூடுதல் பெண் துணை கமிஷ்னரை, பெண் கான்ஸ்டபிள் ஒருவர் அடையாளம் கண்டு கொள்ளாததால், அவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இது கேரள காவல் துறையில் புயலை கிளப்பி உள்ளது.

கடந்த ஜனவரி 1 ஆம் தேதி, கொச்சி நகர சட்ட ஒழுங்கு மற்றும் போக்குவரத்து துணை கமிஷ்னராக ஐஸ்வர்யா டோங்ரே என்பவர் பதவி ஏற்றுள்ளார். இந்நிலையில், கடந்த 10 ஆம் தேதி, எர்ணாகுளம் வடக்கு காவல் நிலையத்துக்கு ஐஸ்வர்யா ஆய்வுக்கு சென்றிருக்கிறார். முகத்தில் மாஸ்க் அணிந்து சாதாரண உடையில் சென்ற அவரை, அங்கிருந்த பெண் கான்ஸ்டபிள் ஒருவருக்கு அடையாளம் தெரியவில்லை.

ஐஸ்வர்யாவை நிறுத்தி நீங்கள் யார் என விசாரணை நடத்தி உள்ளார். பின் உயர் அதிகாரி என தெரிந்து தனது செயலுக்காக அவரிடம் மன்னிப்பும் கேட்டுள்ளார். எழுத்துப்பூர்வமாகவும் விளக்கம் அளித்து மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனாலும் தன்னை எப்படி நிறுத்தலாம் என கோபமுற்ற ஐஸ்வர்யா, அந்த கான்ஸ்டபிளுக்கு தண்டனை வழங்கி உள்ளார்.

கடும் டிராபிக் நிறைந்த கொச்சி ஐகோர்ட் பகுதியில், அவருக்கு 12 மணி நேரம் பணியில் இருக்கும்படி உத்தரவிட்டுள்ளார். கேரளாவில் டிராபிக் பணியில் இருக்கும் போலீசாருக்கு 6 மணி நேரம் மட்டுமே வேலை நேரம். ஆனால், 12 மணி நேரம் வேலை பார்க்க உத்தரவிட்டிருப்பது சர்ச்சையை உருவாக்கி உள்ளது. மாஸ்க் அணிந்திருந்ததால் உயரதிகாரியை தெரியாத பெண் கான்ஸ்டபிளுக்கு இந்த தண்டனை அவசியம் தானா என சமூகவலைதளங்களில் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.

Views: - 0

0

0