புதிய தலைமைச் செயலகத்தில் இரண்டு மசூதிகள் கட்ட முடிவு..! இஸ்லாமியர்களுக்கு சிறப்பு சலுகை கொடுக்கும் தெலுங்கானா அரசு..!

6 September 2020, 9:25 am
Owaisi_KCR_UpdateNews360
Quick Share

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் தனது அரசு புதிய கோயில், மசூதிகள் மற்றும் தேவாலயங்களை மாநில செயலகத்தில் கட்ட உள்ளதாக கூறியுள்ளார்.

இந்த மூன்று கட்டமைப்புகளையும் “கங்கா ஜமுனா தெஜ்ஜீப்” சின்னம் என்று அழைத்த ராவ், அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் அடிக்கல் நாட்டப்படும் அதே நாளில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு ஒரே நேரத்தில் முடிக்கப்படும் என்று கூறினார்.

பிரகதி பவனில் முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த மூத்த உறுப்பினர்களுடனான சந்திப்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அப்போது பழைய செயலகக் கட்டடங்களை அரசாங்கத்தால் இடிக்கும் போது சேதமடைந்த ஒரு கோவிலையும் இரண்டு மசூதிகளையும் கட்ட முடிவு செய்யப்பட்டது.

தெலுங்கானா மத சகிப்புத்தன்மையைக் கடைப்பிடிக்கும் :
“அரசாங்கம் இரண்டு மசூதிகளை நிர்மாணிக்கும். ஒவ்வொன்றும் 750 சதுர அடியில் கட்டப்படும். புதிய மசூதிகள் புதிய செயலகத்தில் அவை இருந்த இடத்திலேயே கட்டப்படும். கட்டுமானத்திற்குப் பிறகு புதிய மசூதிகள் மாநில வக்ஃப் வாரியத்திடம் ஒப்படைக்கப்படும்.” என்று முதல்வர் கூறினார்.

மேலும் 1,500 சதுர அடியில் கோவில் கட்டப்பட்டு, கட்டுமானத்திற்குப் பிறகு, அது எண்டோவ்மென்ட் துறையிடம் ஒப்படைக்கப்படும்.

புதிய செயலகத்தில் சர்ச்சும் இருக்க வேண்டும் என்று கிறிஸ்தவ சமூகத்திடம் இருந்து கோரிக்கை வந்ததால், அரசாங்கம் தேவாலயத்தையும் நிர்மாணிக்கும் என்று தெரிவித்துள்ளது.

அரசு எல்லா மதங்களையும் சமமாக நடத்துகிறது. தெலுங்கானா மத சகிப்புத்தன்மையை எப்போதும் கடைபிடிக்கும் என்று சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.

அனாதை இல்லம், கல்வி மையம், இஸ்லாமியர்களுக்கான இஸ்லாமிய மையம் :
அனாதை முஸ்லீம் குழந்தைகளுக்கு தங்குமிடம் கட்டும் பணி கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. மேலும் ரூ 18 கோடியை கே.சி.ஆர் அரசு இதற்காக விடுவிக்கும்.

ஹைதராபாத்தில் சர்வதேச தரத்தில் ஒரு இஸ்லாமிய மையம் கட்டப்படும் என்றும், இந்த நோக்கத்திற்காக ஒரு துண்டு நிலம் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இது தவிர, அடக்கம் செய்யத் தேவையான இடங்களை (கப்ராஸ்தான்கள்) அடையாளம் காணுமாறு ரங்கரெட்டி மற்றும் மெட்செல் கலெக்டர்களுக்கு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதுடன், நகரத்தின் பல இடங்களில் 150 முதல் 200 கப்ராஸ்தான்கள் உருவாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“நாங்கள் உருதுவை மாநிலத்தின் இரண்டாவது அதிகாரப்பூர்வ மொழியாக அங்கீகரிக்கிறோம். உருது மொழியின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்கான திட்டங்கள் ஏற்பாடு செய்யப்படும்” என்று கே.சி.ஆர் அறிவித்துள்ளார்.

கூட்டத்தில் ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி மற்றும் அவரது சகோதரர் அக்பருதீன் ஒவைசி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Views: - 6

0

0