புதிய பாபர் மசூதி கட்டுவதில் சிக்கல்..! அரசால் ஒதுக்கப்பட்ட நிலம் தங்களுக்கு சொந்தம் என இரு சகோதரிகள் புகார்..!

4 February 2021, 12:47 pm
ayodya_mosque_indo_islamic_cultural_foundation_Updatenews360
Quick Share

ராமர் கோவில்-பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி அயோத்தியில் புதிய மசூதி கட்டுவதற்காக உத்தரபிரதேச சன்னி மத்திய வக்ஃப் வாரியத்திற்கு ஒதுக்கப்பட்ட ஐந்து ஏக்கர் நிலம் தங்களுக்கு சொந்தமானது எனக் கூறி டெல்லியைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள் அலகாபாத் உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளனர். 

அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ பெஞ்ச் முன் மனு நீதிமன்ற பதிவேட்டில் தாக்கல் செய்யப்பட்டு பிப்ரவரி 8’ஆம் தேதி விசாரணைக்கு வர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

ராணி கபூர் அல்லது ராணி பலூஜா மற்றும் ராம ராணி பஞ்சாபி ஆகியோர் தங்களது தந்தை கியான் சந்திர பஞ்சாபி 1947’இல் பஞ்சாபிலிருந்து பிரிவினையின் போது இந்தியாவுக்கு வந்து பைசாபாத் (இப்போது அயோத்தி) மாவட்டத்தில் குடியேறியதாக ரிட் மனுவில் தெரிவித்துள்ளனர்.

தன்னிபூர் கிராமத்தில் 28 ஏக்கர் நிலத்தை வருவாய்த்துறை ஐந்து ஆண்டுகளுக்கு ஒதுக்கியதாக அவர்கள் கூறியுள்ளனர். பின்னர் அந்தக் காலத்தைத் தாண்டி அவர் தொடர்ந்து வைத்திருந்த நிலையில், அவரது பெயர் வருவாய் பதிவுகளில் சேர்க்கப்பட்டதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், பின்னர் பதிவுகளில் இருந்து தந்தையின் பெயர் நீக்கப்பட்டதை அடுத்து அயோத்தி கூடுதல் கமிஷனர் முன் மேல்முறையீடு செய்த பதிவுகளில் தந்தையின் பெரியார் மீண்டும் சேர்க்கப்பட்டது என்று அவர்கள் கூறியுள்ளனர். அதே சமயம் பின்னர் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளின் போது ஒருங்கிணைப்பு அதிகாரி மீண்டும் தங்கள் தந்தையின் பெயரை பதிவுகளிலிருந்து நீக்கியதாக மனுதாரர்கள் மேலும் தெரிவித்தனர்.

ஒருங்கிணைப்பு அதிகாரியின் உத்தரவுக்கு எதிராக, அயோத்தியாவின் ஒருங்கிணைப்பு அலுவலர் முன் முறையீடு செய்யப்பட்டது. ஆனால் அந்த மனுவை பரிசீலிக்காமல், அதிகாரிகள் தங்கள் 28 ஏக்கர் நிலத்தில் ஐந்து ஏக்கர் நிலத்தை வக்ஃப் வாரியத்திற்கு மசூதியைக் கட்டமைக்க ஒதுக்கீடு செய்துள்ளனர் என அவர்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

தீர்வு அதிகாரி முன் சர்ச்சை நிலுவையில் இருக்கும் வரை நிலத்தை சன்னி வக்ஃப் வாரியத்திற்கு மாற்றுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் கோரியுள்ளனர்.

இதனால் அயோத்தியில் திட்டமிட்டபடி பாபர் மசூதி கட்டப்படுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

Views: - 0

0

0