சவூதியிலிருந்து வந்த தீவிரவாதிகளை விமான நிலையத்திலேயே மடக்கிய என்ஐஏ..!

22 September 2020, 12:45 pm
Terror_Suspects_Airport_UpdateNews360
Quick Share

மூன்று அல்கொய்தா தீவிரவாதிகள் கேரளாவில் இருந்து கைது செய்யப்பட்ட சில நாட்களில், திருவனந்தபுரத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் நேற்று இரவு மூன்று மணி நேர விசாரணைக்கு பின்னர், தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) இருவரை கைது செய்துள்ளது என்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சவுதி அரேபியாவிலிருந்து திருவனந்தபுரம் வந்த பின்னர் இருவரையும் என்ஐஏ கைது செய்ததாக கூறப்படுகிறது. இந்த இருவரில் ஒருவர் லஷ்கர்-இ-தொய்பா உடன் தொடர்புடையவர் என்றும் மற்றொருவர் இந்தியன் முஜாஹிதீனைச் சேர்ந்தவர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

செப்டம்பர் 19’ம் தேதி, ஒரு அல் கொய்தா கட்டமைப்பை அழித்த என்ஐஏ, கேரளாவின் எர்ணாகுளத்தைச் சேர்ந்த மூன்று பயங்கரவாதிகளையும், மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத்தில் இருந்து 6 பயங்கரவாதிகளையும் கைது செய்துள்ளதாகவும், அவர்கள் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட இந்தியாவில் பெரிய பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அவர்களிடம் நடத்திய விசாரணையின் மூலம் தற்போது இந்த இருவரும் நாட்டிற்குள் நுழையும் போதே மத்திய பாதுகாப்பு அமைப்புகளால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த குல் நவாஸ், மற்றவர் சுஹைப் கேரளாவின் கண்ணூரைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2008’ஆம் ஆண்டில் பெங்களூரில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ரியாத்தில் இருந்து திரும்பிய பின்னர், புலனாய்வு அமைப்பான ரா உட்பட பல புலனாய்வு அமைப்புகளால் அவர்கள் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் விசாரிக்கப்பட்டனர். அவர்கள் முதலில் கொச்சிக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று கூறப்பட்டாலும் சுஹைப் தற்போது பெங்களூருவுக்கு அழைத்துச் செல்லப்படுவார் என்றும் குல் நவாஸ் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்படுவார் என்றும் கூறப்படுகிறது.  

Views: - 1

0

0