கேரள தங்கக் கடத்தல் வழக்கில் பி.எஃப்.ஐ உறுப்பினர் கைது..! அதிர வைத்த என்ஐஏ விசாரணை..!

3 August 2020, 6:07 pm
NIA_Gold_Smuggling_PFI_UpdateNews360
Quick Share

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எஃப்.ஐ) இணைப்பைக் கண்டுபிடித்த தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ) சர்ச்சைக்குரியபி.எஃப்.ஐ அமைப்பைச் சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளது.

முஹம்மது அலி என அடையாளம் காணப்பட்ட பி.எஃப்.ஐ உறுப்பினர் தவிர, தங்க கடத்தல்காரர்களுடன் சதி செய்ததாக மேலும் ஐந்து சந்தேக நபர்களும் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மூன்று நாட்களில் கேரளாவில் ஆறு இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக என்ஐஏ மேலும் தெரிவித்துள்ளது.

சனிக்கிழமையன்று கைது செய்யப்பட்ட எர்ணாகுளத்தில் வசிக்கும் அலி, பி.எஃப்.ஐ உறுப்பினராக உள்ளார். மேலும் திருவனந்தபுரத்தில் உள்ள சந்தேகத்திற்குரிய ரமீஸ் கே.டி.’யிடமிருந்து கடத்தப்பட்ட தங்கத்தை சேகரித்து, பிற சதிகாரர்களிடையே துணை விநியோகிப்பாளருக்கு மாற்ற உதவி செய்வதோடு, கடத்தல் மோசடியிலும் பங்கேற்றுள்ளார் என என்.ஐ.ஏ செய்தித் தொடர்பாளர் சோனியா நாரங் கூறினார்.

பி.எஃப்.ஐ’யின் கேரள மாநிலத் தலைவர் சி பி முகமது பஷீர் தொடர்பு கொண்டபோது, அலி ஒரு பிஎஃப்ஐ உறுப்பினர் அல்ல என்று மறுத்தார். “அவர் எங்களுடன் தொடர்புபடுத்தவில்லை. பி.எஃப்.ஐ’இன் பெயர் இந்த வழக்கில் தேவையில்லாமல் இழுக்கப்படுகிறது.” என்று பஷீர் கூறினார்.

முன்னதாக ஜூலை 4, 2010 அன்று தொடுபுழாவின் நியூமேன் கல்லூரியின் பேராசிரியர் டி.கே.ஜோசப் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் அலி கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஆதாரம் இல்லாததால் அவர் மே 2015 அன்று விடுவிக்கப்பட்டார்.

2011’ஆம் ஆண்டு முதல் என்ஐஏ இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இப்போது அவர் தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட பின்னர், பெயரிட விரும்பாத அதிகாரிகள், தாக்குதலில் அலியின் பங்கை மீண்டும் விசாரிப்பதாகக் கூறினர்.

நபிக்கு எதிராக அவதூறான உள்ளடக்கத்தைக் கொண்ட ஒரு கேள்வித்தாளைத் தயாரித்ததற்காக ஜோசப் தாக்கப்பட்டார். தாக்குதலின் போது அவரது உள்ளங்கை வெட்டப்பட்டது. ஆனால் அறுவை சிகிச்சை மூலம் மீட்டெடுக்கப்பட்டது.

இந்த தாக்குதல் தொடர்பாக 2015’ஆம் ஆண்டில் எர்ணாகுளத்தில் உள்ள என்ஐஏ நீதிமன்றத்தால் 13 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டு 17 பேர் விடுவிக்கப்பட்டனர்.

கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் தங்கம் கடத்தப்பட்டதில் ஒரு பெரிய பயங்கரவாத சதி குறித்து என்ஐஏ விசாரித்து வருகிறது. பயங்கரவாத நிதி மற்றும் ஹவாலா நடவடிக்கைகளின் பரந்த வலையமைப்பு கடத்தல் மோசடியுடன் இணைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

அலி தவிர, கடந்த மூன்று நாட்களில் கைது செய்யப்பட்டவர்களில் முறையே எர்ணாகுளம் மற்றும் மலப்புரத்தில் வசிப்பவர்களான ஜலால் மற்றும் சையத் ஆல்வி ஆகியோரும் அடங்குவர். முன்னதாக கைது செய்யப்பட்ட ரமீஸ் கே.டி.’யுடன் சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டுகளிலும், திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துணைத் தூதரகத்தில் இராஜதந்திர லக்கேஜ்கள் மூலம் தங்கத்தை கடத்தியதற்காகவும் கைது செய்யப்பட்டனர்.

இதேபோன்ற விவகாரங்களில் மலப்புரம் மாவட்டத்தில் வசிக்கும் முகமது ஷாஃபி மற்றும் அப்துல் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். சனிக்கிழமையன்று, எர்ணாகுளத்தின் முவாட்டுபுழாவில் வசிக்கும் முகமது அலியுடன் முகமது அலி இப்ராஹிமையும் என்ஐஏ கைது செய்தது.

முன்னதாக கைது செய்யப்பட்ட நான்கு பேரில் கேரள அரசாங்கத்தின் முன்னாள் தகவல் தொழில்நுட்ப ஆலோசகர் ஸ்வப்னா சுரேஷ் மற்றும் ஜூலை 3’ம் தேதி திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்ற பி.சரித் குமார் ஆகியோர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகத்திற்கு அனுப்பப்பட்ட ஒரு சரக்குகளை எடுத்துச் சென்றனர்.

ஸ்வப்னா சுரேஷுடன் தொடர்பில் இருந்ததாக முதலமைச்சர் பினராயி விஜயனின் சக்திவாய்ந்த செயலாளர் எம்.சிவசங்கர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடத்தல் மோசடியில் தனது செயலாளரின் பங்கு பற்றி அறிந்திருப்பதாகக் கூறி எதிர்க்கட்சிகள் முதல்வரின் ராஜினாமாவை கோரியுள்ளன.

டெல்லியில், வெளியுறவு இணை அமைச்சர் வி.முரளீதரன் நேற்று தனது இல்லத்தில் ஒரு நாள் சத்தியாகிரகத்தை கடைப்பிடித்தார். “முதல்வரின் அலுவலகம் தேச விரோத நடவடிக்கைகளுக்கான மையமாக மாறியது வருத்தமளிக்கிறது. சில அதிகாரிகளை தியாகம் செய்வதன் மூலம் அவர் தப்ப முடியாது.” என்று அவர் கூறினார்.

Views: - 2

0

0