அமலாக்கத்துறையை அடுத்து என்ஐஏ விசாரணையில் கே.டி.ஜலீல்..! தங்கக் கடத்தல் வழக்கில் புதிய திருப்பம்..!

17 September 2020, 10:18 am
Kerla_Minister_Jaleel_UpdateNews360
Quick Share

பினராயி விஜயன் அரசாங்கத்திற்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தும் விதமாக, தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக கேரள அமைச்சர் கே.டி.ஜலீலை கொச்சியில் உள்ள தனது அலுவலகத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ) வறுத்தெடுக்த்துள்ளது.

என்ஐஏ, அமலாக்க இயக்குநரகம் மற்றும் சுங்கத் துறையால் விசாரிக்கப்பட்டு வரும் கேரள தங்கக் கடத்தல் வழக்கு, இராஜதந்திர சேனல்கள் மூலம் மாநிலத்தில் தங்கம் கடத்தப்படுவது தொடர்பானது.

ஜூலை 5’ம் தேதி திருவனந்தபுரத்தில் சுங்கத்துறையால் இராஜதந்திர லக்கேஜ்கள் மூலம் கடத்தப்பட்ட ரூ 14.82 கோடி மதிப்புள்ள 30 கிலோ கடத்தல் தங்கம் கைப்பற்றப்பட்ட பின்னர் இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.

இந்த வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலர் உள்ளிட்ட பலர் சிக்கிய நிலையில், அமலாக்கத்துறை, சுங்கத்துறை மற்றும் என்ஐஏ ஆகியவற்றால் பல்முனை விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தங்கக் கடத்தல் வழக்கில் விசாரணை செய்த போது கிடைத்த சில ரகசிய தகவல்களை அடுத்து, குரானைக் கொண்ட ஒரு லக்கேஜ் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகத்திற்கு அனுப்பப்படுவது குறித்து அமலாக்க இயக்குநரகம் கே.டி.ஜலீலை விசாரித்திருந்தது.

இந்நிலையில் தற்போது என்ஐஏவும் ஜலீலை அழைத்து விசாரணை நடத்தியுள்ளது. என்ஐஏ தீவிரவாத தொடர்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களை மட்டுமே விசாரித்து வருவதால், கே.டி.ஜலீலுக்கும், தங்கக் கடத்தல் மூலம் தீவிரவாதத்திற்கு நிதியளிக்கப்படுவதற்கும் தொடர்பு உள்ளதோ எனும் சந்தேகம் வலுத்துள்ளது.

இதற்கிடையில், தங்க கடத்தல் வழக்கில் ஜலீலுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி அவரை பதவி நீக்கம் செய்யுமாறு பாரதிய ஜனதா கோரியுள்ளது. இருப்பினும், கேரள முதல்வர் பினராயி விஜயன் இதை திட்டவட்டமாக மறுத்து, குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்றும் இந்த சம்பவம் குறித்து ஜலீல் விலக வேண்டிய அவசியமில்லை எனவும் கூறியுள்ளார். 

ஆனால் இதே குற்றசாட்டுகளுக்காக முதல்வர் அலுவலகத்தின் முதன்மைச் செயலாளர் சிவசங்கரனை நீக்கிய முதல்வர் பினராயி விஜயன், ஏன் ஜலீலை மட்டும் நீக்க மறுக்கிறார் எனும் கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.

Views: - 0

0

0