தடை செய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்புடன் தொடர்பு..! விவசாய சங்கத் தலைவர் உள்ளிட்ட 40 பேருக்கு சம்மன் அனுப்பியது என்ஐஏ..!

17 January 2021, 12:21 pm
farmers_at_delhi_border_updatenews360
Quick Share

விவசாய சங்கத்தின் தலைவர் பல்தேவ் சிங் சிர்சா மற்றும் பஞ்சாபி நடிகர் தீப் சித்து ஆகியோரை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சீக்கியர்களுக்கான நீதி (எஸ்.எஃப்.ஜே) எனும் இந்தியாவில் தடை செய்யப்பட பயங்கரவாத அமைப்பு தொடர்பான வழக்கில இன்று ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது.

பிரிவு 160 சிஆர்பிசி குற்றவியல் நடைமுறை நெறிமுறையின் கீழ் சீக்கியர்களுக்கான நீதி (எஸ்.எஃப்.ஜே) தொடர்பான வழக்கில் சாட்சிகளாக 40 பேரையும் என்.ஐ.ஏ வரவழைத்துள்ளது.

பஞ்சாபி நடிகர் தீப் சித்துவை தேசிய விசாரணை நிறுவனம் (என்ஐஏ) முன்னதாக நேற்று வரவழைத்தது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பன்னிரெண்டாம் அத்தியாயத்தின் கீழ் ஒரு வழக்கு தொடர்பாக தீப் சித்துவை புது டெல்லியில் உள்ள அதன் தலைமையகத்தில் ஆஜராகுமாறு என்ஐஏ கேட்டுக் கொண்டுள்ளது.

இந்தியாவை தளமாகக் கொண்ட காலிஸ்தான் சார்பு நபர்களுக்கு பெரும் நிதி அனுப்பப்படுவதாகக் கூறி, நாட்டில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த எஸ்.எஃப்.ஜே தலைமை சதி செய்ததாக என்ஐஏ குற்றம் சாட்டியது. 

இந்த தடைசெய்யப்பட்ட அமைப்பு இந்தியாவில் இருந்து பஞ்சாபை பிரித்து தனி காலிஸ்தான் நாட்டை உருவாக்க விரும்புகிறது. இந்த வழக்கில் அழைக்கப்பட்ட மற்ற நபர்களில் பஞ்சாபி நடிகர் தீப் சித்து தவிர பத்திரிகையாளர் ஜஸ்பீர் சிங் மற்றும் ஆர்வலர் குர்பிரீத் சிங் ஆகியோரும் அடங்குவர்.

ஜனவரி 18 முதல் 21 வரை என்ஐஏவின் டெல்லி தலைமையகத்தில் அனைவரையும் ஆஜராகுமாறு கேட்டு ஜனவரி 15’ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.

எனினும் நேற்று ஒரு கடிதத்தை சமூக ஊடக தளமான பேஸ்புக்கில் பகிர்ந்த தீப் சித்து இன்று என்ஐஏ விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். விவசாயிகளின் போராட்டத்தின் போது தீப் சித்து தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 7

0

0