நாளை முதல் ஏப்ரல் 30-ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்..

15 April 2021, 8:57 am
Quick Share

ராஜஸ்தான்: கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், நாளை முதல் மீண்டும் இரவுநேர ஊரடங்கை ராஜஸ்தானில் அரசு அறிவித்துள்ளது.

நாட்டில் கட்டுக்குள் இருந்து வந்த கொரோனா தொற்று தற்போது வேகமாக பரவி வருகிறது. நோய் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், கொரோனா தொற்று அதிகரித்து வரும் மாநிலங்களில் ஒன்றான ராஜஸ்தானில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது.ராஜஸ்தானில் நாளை முதல் ஏப்ரல் 30-ம் தேதி வரை இரவு  நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

Views: - 19

0

0