மறு உத்தரவு வரும் வரை இரவு ஊரடங்கு..! பஞ்சாபைத் தொடர்ந்து மத்திய பிரதேசமும் அறிவிப்பு..!

8 April 2021, 9:43 am
New_Corona_Virus_Strain_UpdateNews360
Quick Share

ஏப்ரல் 8 முதல் மாநிலத்தின் அனைத்து நகர்ப்புறங்களிலும் இரவு ஊரடங்கு உத்தரவு விதிப்பதாக மத்திய பிரதேச அரசு இன்று அறிவித்ததுடன், அடுத்த மூன்று மாதங்களுக்கு ஒவ்வொரு வாரமும் ஐந்து நாட்கள் மட்டும் அரசு அலுவலகங்களை இயக்க முடிவு செய்துள்ளது. 

மேலதிக உத்தரவு வரும் வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அனைத்து மாவட்டங்களின் நகர்ப்புறங்களிலும் முழு ஊரடங்கு விதிப்பதாகவும், நாளை தொடங்கி அடுத்த ஏழு நாட்களுக்கு இரவு 8 மணி முதல் தொடங்கி முழு சிந்த்வாரா மாவட்டத்திலும் ஊரடங்கு விதிப்பதாக மத்திய பிரதேச அரசு அறிவித்தது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து தினசரி தொற்றுகள் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்த நிலையில், கொரோனா பாதிப்புகள் அதிகம் உள்ள மாநிலங்கள் கட்டுப்பாடுகளை அதிகரித்த வண்ணம் உள்ளன.

இன்று முன்னதாக பஞ்சாப் ஏப்ரல் 30 வரை இரவு நேர ஊரடங்கு அறிவிப்பதாகக் கூறியிருந்த நிலையில், மத்திய பிரதேச அரசும் கட்டுப்பாடுகளை அதிகரித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

“ஏப்ரல் 8 முதல் ஒவ்வொரு இரவும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மேலதிக உத்தரவுகள் வரும் வரை மாநிலத்தின் அனைத்து நகர்ப்புறங்களிலும் இரவு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படும். மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களின் நகர்ப்புறங்களிலும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.” என மத்திய பிரதேச முதல்வர் அலுவலகம் வெளியிட்ட ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது.

Views: - 18

0

0