தவுசீப் உள்ளிட்ட இருவர் குற்றவாளிகள் என அறிவிப்பு..! கல்லூரி வாசலில் மாணவி சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் தீர்ப்பு வெளியானது..!

Author: Sekar
24 March 2021, 5:15 pm
hariyana-murder1-updatenews360
Quick Share

ஹரியானாவில் அக்டோபர் 2020’இல் பட்டப்பகலில் கல்லூரி வாசல் முன்பு துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிகிதா தோமர் கொலை வழக்கில், பிரதான குற்றவாளி தவுசீப் மற்றும் அவரது நண்பர் ரெஹான் ஆகியோர் குற்றவாளிகள் என ஃபரிதாபாத் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் உள்ள பாலப்கர் பகுதியில் அமைந்துள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்த நிகிதா தோமர், சம்பவத்தன்று வழக்கம் போல, கல்லூரியை முடித்து விட்டு, தனது தோழியுடன் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். 

அப்போது, காரில் வந்த தவுசீப், கையில் துப்பாக்கியுடன் நிகிதாவை மறித்து காரில் கடத்திச் செல்ல முயன்றுள்ளார். அப்போது, தவுசீப்பிடம் இருந்து தப்பியோட முயன்ற நிகிதா தோமரை, கையில் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால், மாணவியின் தலையில் சுட்டு கொன்றார்.

பதைபதைக்க வைக்கும் இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், போலீசார் விரைவாக விசாரணை நடத்தி குற்றவாளிகளான தவுசீப், அவனது நண்பன் ரெஹான் மற்றும் ஆயுத சப்ளையர் அஸ்ரூதினை கைது செய்தது.

இந்த வழக்கின் விசாரணை ஃபரிதாபாத் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது.
இதில் பிரதான குற்றம் சாட்டப்பட்டவரான தவுசீப் மற்றும் அவனது நண்பன் ரெஹான் ஆகியோர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்த நீதிமன்றம், ஆயுதத்தை வழங்கிய மூன்றாவது குற்றம் சாட்டப்பட்ட அஸ்ருதீனை விடுவித்துள்ளது.

இவர்கள் இருவருக்குமான தண்டனை விவரங்கள் மார்ச் 26 அன்று வெளியிடப்படும் என நீதிமன்றம் மேலும் தெரிவித்துள்ளது.

Views: - 73

0

0