கொரோனா டெஸ்ட் செய்து கொண்ட பிரபல அரசியல் தலைவர்..! முடிவு என்ன தெரியுமா..?

18 August 2020, 9:40 am
Quick Share

மும்பை: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருக்கு நடத்தப்பட்ட கொரோனா சோதனை நெகட்டிவ் என்று வந்துள்ளது.

நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் கால் பதித்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது கொரோனா. பலி எண்ணிக்கையும், பாதிப்பும் மிக அதிகம்.

இறப்பு விகிதம் குறைவாக இருந்தாலும் நாள் ஒன்றுக்கு பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே போகிறது. சாதாரண மக்களை மட்டுமல்லாமல் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா கொரோனாவால் பாதிக்கப்பட்டார். முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கொரோனாவால் மருத்துவமனையில் உள்ளார்.

இந் நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கொரோனா பரிசோதனைக்கு ஆளாகி உள்ளார். அவரது வீட்டு சமையல்காரர் உட்பட 2 பேருக்கும், பாதுகாவலர்கள் இருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இந்த தகவலை அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்து இருக்கிறது. இதையடுத்து, சரத்பவாரும் மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனை முடிவில், கொரோனா நெகட்டிவ் என்று வந்துள்ளது. இதையடுத்து அவர் தமது வீடு திரும்பி உள்ளார். ஆனாலும் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் வீட்டில் தம்மை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

Views: - 32

0

0