12’ஆம் வகுப்பு தேர்ச்சிக்கு 25,000 ரூபாய்..! பட்டப்படிப்புக்கு 50,000 ரூபாய்..! மாணவிகளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த முதல்வர்..!

26 September 2020, 9:49 am
Bihar_Girls_UpdateNews360
Quick Share

12’ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறும் மற்றும் பட்டம் பெறும் மாணவிகளுக்கு நிதியுதவி அளிக்கும் சிறப்புத் திட்டங்களை பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் நேற்று அறிவித்தார்.

தென்னிந்தியாவைப் போல் அல்லாமல் வட இந்தியாவின் பல பகுதிகள் கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ளது. பள்ளிகளில் இடைநிற்றல் தொடர்ந்து அதிக அளவிலேயே உள்ளது. கல்லூரிகளுக்கு பெண்கள் செல்வதும் மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது.

பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் குறிப்பாக மாணவிகள் இடைநிற்றல் தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவிகளின் இடைநிற்றலைக் குறைப்பதற்காக பீகாரில் நிதிஷ் தலைமையிலான அரசாங்கம் தொடர்ந்து பல திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

இந்த வரிசையில் தற்போது 12’ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெரும் மாணவிகளுக்கு 25,000 ரூபாய் ரொக்கமும், பட்டப்படிப்பில் தேர்ச்சி பெரும் மாணவிகளுக்கு 50,000 ரூபாய் ரொக்கமும் வழங்குவதாக அறிவித்துள்ளார்.

இந்த திட்டங்களின் மூலம் மாணவிகளின் இடைநிற்றல் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கபப்டுகிறது. இந்நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், ஓட்டுக்களைக் கவர இதுபோன்ற கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவிக்கிறார் எனக் கூறி விமர்சித்து வருகின்றனர்.

Views: - 7

0

0