புயலால் புரட்டி போட்ட லாரி மற்றும் பேருந்து : ஆந்திராவில் நிவர் புயலால் தடம்புரண்டு விபத்து!!
25 November 2020, 4:20 pmஆந்திரா : சித்தூர் மாவட்டம் ஸ்ரீகாளகஸ்தி அருகே புயலின் தாக்கத்தால் சூறைக் காற்று அடித்ததில் சாலையில் சென்று கொண்டிருந்த பஸ் மற்றும் லாரி தடம்புரண்டது.
குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக நிவர் புயல் உருவாகி வருகிறது. இன்று காரைக்கால் அருகே நள்ளிரவு அல்லது அதிகாலை கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையலி, இதன் பாதிப்பு நெல்லூர் மாவட்டம் வரை சூறாவளி காற்று அதிகமாக வீசி வருகிறது.
இதன் காரணமாக இன்று நெல்லூர் மாவட்டத்தில் இருந்து சித்தூர் – காளஹஸ்தி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த பேருந்து மற்றும் லாரி சூறாவளி காற்றுக்கு இழுத்துச் செல்லப்பட்டு தடம் புரண்டது.
இதில் பயணித்த பயணிகளுக்கும், ஓட்டுநர்களுக்கும் எந்தவித காயமும் இல்லாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஆந்திர மாநிலத்தில் சித்தூர் மாவட்டம் மற்றும் நெல்லூர் மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
மேலும் சூறைக்காற்றுடன் புயல் வீசுவதால் பொதுமக்களுக்கு மாவட்ட சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் திருமலையில் கனமழை பெய்து வருவதால் பக்தர்கள் அவதியடைந்துள்ளனர். மழையில் நனைந்து கொண்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
0
0