வயது 60’க்கும் அதிகமா..? தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடையாது..! பாஜகவின் திடீர் முடிவால் ஷாக்..!

1 February 2021, 8:32 pm
BJP_flag_UpdateNews360
Quick Share

பாஜகவின் குஜராத் பிரிவு 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், மூன்று முறை பதவியில் இருந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ஒரு அரசியல்வாதியின் உறவினர்களாக இருப்பவர்கள், வரவிருக்கும் உள்ளாட்சி அமைப்பு மற்றும் நகராட்சித் தேர்தல்களில் போட்டியிட கட்சியில் வாய்ப்பு தர வேண்டாம் என்று முடிவு செய்துள்ளது என குஜராத் பிரிவின் கட்சித் தலைவர் சி.ஆர்.பாட்டீல் இன்று தெரிவித்தார்.

வரவிருக்கும் மாநகராட்சித் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக குஜராத் பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டம் காந்திநகரில் நடைபெறுகிறது. மூன்று நாள் கூட்டத்தின் முதல் நாளான இன்று இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டம் குஜராத் முதல்வர் விஜய் ரூபானியின் இல்லத்தில் நடைபெறுகிறது. மாநகராட்சிகள், நகராட்சிகள், மாவட்டம் மற்றும் தாலுகா பஞ்சாயத்துகளின் தேர்தலுக்கு கட்சி 8,000 வேட்பாளர்களை தேர்வு செய்யவுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவு தேதிகளை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாநகராட்சிகளுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 21’ஆம் தேதியும், நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளுக்கு பிப்ரவரி 28’ஆம் தேதியும் நடைபெறும்.

முனிசிபல் கார்ப்பரேஷன் தேர்தலுக்கான முடிவுகள் பிப்ரவரி 23’ஆம் தேதியும், நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளுக்கான முடிவுகள் மார்ச் 2’ஆம் தேதியும் வெளிவரும்.

இந்நிலையில் குஜராத் பாஜகவின் இந்த திடீர் முடிவு, அடிமட்ட அளவில் கட்சிக்கு துடிப்பான உள்ளூர் தலைவர்களை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளதன் எதிரொலி தான் என குஜராத் பாஜக வட்டாரங்களில் கூறப்படுகிறது.

Views: - 18

0

0

1 thought on “வயது 60’க்கும் அதிகமா..? தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடையாது..! பாஜகவின் திடீர் முடிவால் ஷாக்..!

Comments are closed.