டெங்குவால் டெல்லியில் ஒரு மரணம் கூட நிகழவில்லை..! அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி சுகாதார அமைச்சர் பாராட்டு..!

28 October 2020, 11:31 am
delhi_helath_minister_satyendar_jain_updatenews360
Quick Share

இந்த ஆண்டு டெல்லியில் டெங்கு தொடர்பான இறப்பு எதுவும் பதிவாகவில்லை என்றும், இதற்காக அரவிந்த் கெஜ்ரிவால் அரசாங்கத்தின் டெங்கு எதிர்ப்பு பிரச்சாரத்தை பாராட்டுவதாகவும் டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஒரு ட்வீட்டில், சுகாதார சேவைகள் இயக்குநரகம் தயாரித்த தரவுத் தாளைப் பகிர்ந்துள்ளார். அதன்படி, டெல்லியில் இந்த ஆண்டு அக்டோபர் 24 வரை 489 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.

“டெல்லி மக்கள் இதைச் செய்தார்கள்! இந்த ஆண்டு டெங்கு காரணமாக எந்த மரணமும் இல்லை. கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடும்போது பாதிப்புகளின் எண்ணிக்கையில் கூர்மையான வீழ்ச்சியும் உள்ளது.

முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ’10 ஹப்தே 10 பஜே 10 மினிட்’ பிரச்சாரத்தின் மூலம் உங்கள் அனைவரின் ஒத்துழைப்பால் வெற்றி சாத்தியமாகியுள்ளது” என்று சத்யேந்திர ஜெயின் ட்வீட் செய்துள்ளார்.

தரவுகளின்படி, அக்டோபரில் டெல்லியில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 223’ஆக உள்ளது. செப்டம்பரில் இது 188 ஆகவும், ஆகஸ்டில் 47 ஆகவும் இருந்தது.

2017’ஆம் ஆண்டில் 10 இறப்புகளுடன் 4,726 டெங்கு பாதிப்புகளும், 2018’இல் நான்கு இறப்புகளுடன் 2,798 பாதிப்புகளும், 2019’ஆம் ஆண்டில், இரண்டு இறப்புகளுடன் 2,036 பாதிப்புகளும் பதிவாகியுள்ளதாக டிஜிஎச்எஸ் தரவு தெரிவிக்கிறது.

Views: - 18

0

0

1 thought on “டெங்குவால் டெல்லியில் ஒரு மரணம் கூட நிகழவில்லை..! அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி சுகாதார அமைச்சர் பாராட்டு..!

Comments are closed.