மிசோரமில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லை: சுகாதாரத்துறை தகவல்..!!

19 October 2020, 10:05 am
corona_vaccine_updatenews360
Quick Share

மிஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை என அம்மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையிலும் சில மாநிலங்கள் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தீவிரம் முயற்சிகள் மேற்கொண்டுள்ளன. அந்த வகையில், வடகிழக்கு மாநிலமான மிசோரம் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளபோதும் மிசோரம் மாநிலத்தில் கொரோனாவால் இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை.

இந்நிலையில், மிசோரம் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை என்று அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மிசோரம் மாநிலத்தில் 2,253 பேருக்கு கொரோனா ஏற்பட்ட நிலையில் தொற்று காரணமாக யாரும் இதுவரை உயிரிழக்கவில்லை. 2148 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 105 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 26

0

0