பாராளுமன்றத்தில் கேள்வி நேரம் ரத்து..! மழைக்கால கூட்டத்தொடருக்குத் தயாராகும் மக்களவை..!

2 September 2020, 12:51 pm
parliament_monsoon_session_updatenews360
Quick Share

பாராளுமன்றத்தின் செப்டம்பர் 14 முதல் தொடங்க உள்ள பருவமழை அமர்வில் கேள்வி நேரம் மற்றும் தனிநபர் மசோதா தாக்கல் மற்றும் தீர்மானம் எதுவும் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பூஜ்ய நேரம் மற்றும் பிற நடவடிக்கைகள் அட்டவணைப்படி நடைபெறும்.

அமர்வு செப்டம்பர் 14’ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 1’ஆம் தேதி நிறைவடையும். மக்களவை அமர்வின் முதல் நாளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை சபை நடவடிக்கைகள் இருக்கும். அடுத்தடுத்த நாட்களில், மக்களவை மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை நடக்கும்.

அமர்வில் கலந்துகொள்பவர்கள் சபை தொடங்குவதற்கு 72 மணி நேரத்திற்குள் கொரோனாவுக்கு சோதனை செய்வது உட்பட தேவையான கொரோனா வைரஸ் நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

குறிப்பிட்ட விஷயம் குறித்து விவாதிக்க விரும்பினால் சபை தொடங்குவதற்கு முன்பே நோட்டீஸ் கொடுக்கப்பட வேண்டும். அமர்வு தொடங்குவதற்கு முன் வழங்கப்பட வேண்டிய நோட்டீஸ்கள் 2020 செப்டம்பர் 9 புதன்கிழமை காலை 10 மணி முதல் மட்டுமே வழங்கப்பட வேண்டும். கூறப்பட்ட தேதிக்கு முன்னர் பெறப்பட்ட இத்தகைய நோட்டீஸ்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விஷயத்தில் கலந்துரையாடலை விரும்பும் எந்தவொரு உறுப்பினரும் செகரட்டரி ஜெனெரலுக்கு எழுத்துப்பூர்வமாக நோட்டீஸ் கொடுக்கலாம். எழுப்பப்பட வேண்டிய விஷயத்தை தெளிவாகவும் துல்லியமாகவும் குறிப்பிட வேண்டும். 

நோட்டீஸ் கொடுக்கப்படும் முன்பு, அறிவிப்பு குறைந்தபட்சம் மற்ற இரண்டு உறுப்பினர்களின் கையொப்பங்களால் ஆதரிக்கப்பட வேண்டியது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளுக்கு இணங்காத குறுகிய கால கலந்துரையாடல்களின் நோட்டீஸ்கள் ஏற்கப்படாது.

Views: - 4

0

0