இந்திய அரசியலமைப்பு சட்ட புத்தகத்தின் மீது உறுதிமொழி எடுத்து திருமணம் செய்த தம்பதி

18 January 2021, 10:43 am
Quick Share

இந்திய அரசியலமைப்பு சட்ட புத்தகத்தின் மீது உறுதிமொழி எடுத்து திருமணம் செய்த தம்பதி தான் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றனர்.

பொதுவாகத் திருமணம் என்றால் சடங்குகள் சம்பர்தாயங்கள் நிறைந்து இருக்கும் எந்த மத திருமணமாக இருந்தாலும் அதற்கான வழி முறைகள் இருக்கிறது. சுயமரியாதை திருமணங்களில் உறுதிமொழி எடுப்பது, அவர்களுக்குப் பிடித்த தலைவர்கள் அல்லது விஷயங்கள் முன்னிலையில் திருமணம் செய்வது நடக்கும்.

ஆனால் மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள கார்கோன் மாவட்டம், பகவான்புராடெசில் பகுதிக்கு அருகே உள்ள தபாலா என்ற கிராமத்தில் சமீபத்தில் நடந்த திருமணம் தான் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவும் விஷயம். இந்த ஊரில் உள்ள தம்பதி தங்கள் திருமணத்திற்கு எந்த விதமான சடங்கு மற்றும் சம்பர்தாயத்தையும் கைபிடிக்காமல் சுயமரியாதை திருமணத்தைச் செய்ய முடிவு செய்தனர். அதற்காக அவர்கள் உறுதி மொழி எடுக்க எடுத்துக்கொண்ட விஷயம் தான் பெரிய ஹைலேட், பெரும்பாலும் தமிழகத்தில் சுயமரியாதை திருமணங்களில் பெரியார் புகைப்படத்திற்கு முன்போ அல்லது சிலைக்கு முன்போ சுயமரியாதை திருமணங்கள் நடைபெறும்.

ஆனால் இந்த தம்பதி இந்திய அரசிலயமைப்பு சட்ட புத்தகத்தையும், அம்பேத்கர் மற்றும் பிஸ்ரா முண்டா மற்றும் சில தலைவர்களின் புகைப்படத்தையும் வைத்து உறுதிமொழி ஏற்றுத் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் உறுதிமொழி ஏற்ற விடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்திய அரசியலமைப்பு சட்ட புத்தகத்திற்கு முன்பு தம்பதிகள் திருமணம் செய்து கொண்டதைப் பலர் பாராட்டி வருகின்றனர். திருமணமான தம்பதிகளுக்கும் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Views: - 6

0

0