2022 ஜனவரி 31 வரை பட்டாசு வெடிக்க தடை விதித்தது ராஜஸ்தான் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் கட்டுக்குள் வந்துள்ள நிலையில் மூன்றாம் அலை எச்சரிக்கையை கவனத்தில் கொண்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக கொரோனா பரவலின்போது பட்டாசுகள் வெடிப்பது நோயாளிகளுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஜனவரி 31 ஆம் தேதி வரை ராஜஸ்தான் அரசு பட்டாசு விற்பனைக்கு தடை விதிப்பதாக தெரிவித்துள்ளது. பொதுமக்கள் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் பட்டாசுகள் வெடித்தால் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் மக்கள் தீபாவளிக்கு பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
0
0